சங்க காலத்தில் உலகாயதமும் அது சந்தித்த சவால்களும்

822
0
SHARE

 

வரலாற்றின் நீண்ட நெடிய காலப்பகுதியில் உலகமெங்கும் கடவுள் பற்றிய இருவேறு கருத் துக்கள் எப்போதும் இருந்தேவந்துள்ளன. கடவுள் உண்டு என்பார்க்கும், இல்லை என்பார்க் கும் மோதல்கள் நிகழ்ந்தே வந்துள்ளன. ஏடறியா வரலாற்றுக் காலத்திலேயே இம் மோதல்கள் தொடங்கிவிட்டன எனலாம். வரலாற்றில் வர்க்கப் பிரிவினையும் வர்க்க மோதல்களும் தோன்றிய காலகட்டத்திலேயே பொருள் முதல் வாதமும் (பகுத்தறிவு வாதம், நாத்திகம்) கருத்து முதல்வாதமும் (ஆத்திகம்) தோன்றித் தம்முன் மோதத் தொடங்கிவிட்டன. இம்மோதல் மற்றும் முரண்பாடுகளின் தாக்கத்தைச் சங்க இலக் கியங்களிலும் காணமுடிகிறது.

சங்க காலத்தில் தமிழகத்தில் கடவுள் மறுப்புக் கொள்கைகளும் பொருள் முதல்வாதக் கருத்துக் களும் இருந்ததற்கான குறிப்புக்கள் சங்க இலக் கியங்களில் காணப்படுகின்றன. அவற்றைப் பின் பற்றியவர்களை பூதவாதிகள் என்றும் உலோகா யதர் என்றும், இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. `முரணினர்’ என்றும் `இகல் கண்டார்’ என்றும் அவர்களை அவை இகழ்ச்சியாகக் குறிப்பிடு கின்றன.

உலகாயதர்களும் பூதவாதிகளும் கருத்து முதல்வாதிகளின் கடவுள் கொள்கைகளையும் இம்மை மறுமை மற்றும் வினைப்பயன் விதிப் பயன் பற்றிய கருத்துக்களையும் மறுத்துரைத் தார்கள். அதற்காக அவர்கள் கருத்து முதல்வாதி களால் அவமதிக்கப்பட்டார்கள். அச்சுறுத்தப் பட்டார்கள், அழித்தொழிக்கப்பட்டார்கள். அதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் விரிவாகவே காணப்படுகின்றன.

கருத்து முதல்வாதிகள் பூதங்கள் ஐந்து என்ற னர். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்பவையே அவை. வள்ளுவரும் ஐம்பூதக் கொள்கையை ஏற்கிறார். “பூதங்கள் ஐந்தும்” என்பது அவர் கூற்று. ஆனால் உலகாயதர்களும் பூதவாதிகளும் ஐம்பூதக் கொள்கையை ஏற்பதில்லை. “பூதங்கள் நான்கு” என்பதே அவர் தம் கொள்கை. ஆகா யத்தை ஒரு பூதமாக அவர்கள் ஏற்பதில்லை. “நிலம், நீர், தீ, காற்று எனப் பூதம் நான்கேயாகும். அவற்றின் சேர்க்கையால் உடம்பு தோன்று கிறது” என்று பூதவாதிகள் கூறுகின்றனர். உலகா யதர் பற்றியும் பூதவாதிகள் பற்றியும் மணி மேகலை நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

சாத்தனாரது மணிமேகலை நூலில், மணி மேகலை வஞ்சிமாநகரில் பூதவாதிகளுடன் வாதம் புரிந்தமை குறித்தும் பூதவாதி தனஅ கருத்துக்களை மணிமேகலைக்கு எடுத்துரைத்தது பற்றியும் செய்திகள் காணப்படுகின்றன.

“பூதங்களில் உணர்வு உடைய பூதம் உணர்வு இல்லாத பூதம் என இருவகை உண்டு. உணர்வு இல்லாத பூதங்களின் சேர்க்கையால் உடம்பு தோன்றுகிறது. உணர்வு உடைய பூதங்களின் கூட்டத்தால் உயிர் தோன்றுகிறது. அத்திப் பூவையும் கருப்புக் கட்டிகளையும் இட்டு வேறு பொருள்களையும் கலந்து காய்ச்சுவதால் கள் உண்டாகி, அக்கள்ளில் களிப்பு (வெறி, போதை) தோன்றுகிறது. அதுபோல் பூதங்கள் பொருந்திக் கூடுவதால் உணர்வு பிறக்கிறது. அப்பூதங்களின் கூட்டம் கலைந்து நீங்குவதுதான் மரணம். பறை யோசை தூரத்தே செல்லச் செல்லத் தேய்ந்து கெடுவதுபோல, உணர்வு வேறு வேறாகப் பிரிந்து தத்தம் முதலோடு ஒன்றிவிடும். உண்மை நெறி இதுவேயாகும்” என்று உயிர் உடம்பு ஆகிய வற்றின் தோற்றமும் மறைவும் குறித்து பூதவாதி கள் கூறுகின்றனர். இவர்களின் இக்கூற்று. “ பிரமன் உலகத்தைப் படைக்கிறான், சிவன் அழிக் கிறான்” என்னும் கருத்து முதல்வாதிகளின் உயிர் களின் தோற்றமும் மறைவும் பற்றிய கருத்துக்கு எதிரானதாகும்.

மேலும் அளவை நூலார் கூறுகின்ற காட்சி யளவை, அனுமான அளவை மற்றும் ஆகம அளவை ஆகியவற்றில் காட்சியளவை ஒன்றைத் தவிர, ஏனைய அனுமான ஆகம அளவைகளை பூதவாதிகள் ஏற்பதில்லை. அதுபோலவே, இம்மை, மறுமை பயன்கள் என்பவற்றையும் அவர்கள் ஏற்பதில்லை. அவற்றைப் பொய் என்றே இன்பமும் துன்பமும் இப்பிறவியிலேயே கழிவன. மறுபிறப்பு இல்லை. இப்பிறவியில் செய்யப்படும் வினையின் பயனை மறுபிறப்பில் நுகர்தல் வேண் டும் என்று கூறும் கருத்துக்கள் பொய்யுரையே யாகும்” என்று பூதவாதிகள் கூறுகின்றனர். இத னாலேயே அவர்கள்.

“நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லை”

– புறனானூறு

இம்மையும் இம்மைப் பயனும் இப்பிறப்பே

பொய்மை மறுமையுண்டாய் வினை               துய்த்தல்”       – மணிமேகலை

என்றும் கூறினர்.

சிறுபான்மையினரான செல்வர்கள் சுக போகங்களோடு சொகுசு வாழ்க்கை வாழ்கின் றனர். தாம் அனுபவிக்கின்ற நலன்களுக்கு, அவர் கள் முன் பிறவியில் செய்த புண்ணியமாகிய நல் வினையும் தவமுமே காரணம் எனஅபர். அது போலவே பெரும்பான்மையினரான உழைக்கும் மக்கள் வறியவர்களாய் படுகின்ற துன்பங் களுக்கும் துயரங்களுக்கும் அவர்கள் முன் பிறவி யில் செய்த பாவமாகிய தீவினைகளும் தவம் செய்யாமையுமே காரணம் என்பர். வள்ளு வரும்கூட

இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்

சிலர் பலர் நோலாதவர் – குறள்

என்றுதான் கூறுகிறார்.

உழைக்கும் மக்களின் உழைப்பு சுரண்டப் படுவதே செல்வர்களின் சுகபோகத்துக்கும் ஏழைகளின் துயரத்துக்கும் காரணம் என்பதை மறைப்பதற்கே செல்வர்களும் அவர்களின் அடி வருடிகளான கருத்து முதல்வாதிகளும் இவ் வாறு கூறினர். எனவே சுரண்டும் வர்க்கத்தாரும் அவர்களின் கைக்கூலிகளான கருத்து முதல் வாதிகளும் தங்கள் கருத்துக்களை ஏற்க மறுத்த பொருள்முதல்வாதிகளான உலகாயதர்களைச் சிற்றினம் என்று பழித்தனர். `அரசர்கள் அவர் களை ஆதரிக்கக்கூடாது என்று தடுத்தனர். அவர்களை மூர்க்கமாக எதிர்த்து அழித்தனர். அவர்களின் இத்தகைய அடாவடித்தனமான கொடுஞ்செயல்களுக்குச் சங்க இலக்கியங்கள் சான்றளிக்கின்றன.

`கடவுள் இல்லை’ எனபாரான நாத்திகர் களைத் திருமுருகாற்றுப்படை “முரணினர்” என்னும் ஒற்றைச் சொல்லால் குறிப்பிடுகிறது. அவர்கள் மேல் கருத்து முதல்வாதிகள் கொண் டிருந்த அளவற்ற  வெறுப்பையும் சினத்தையும் அவ்வொற்றைச் சொல் தெலிவாகப் புலப் படுத்துகிறது. “கடவுள் இல்லை என்பார் அஞ்சும் படியாகக் குறமகள் வாத்தியங்களை முழக்கி வெறியாட்டமாடினாள்” என்று அந்நூல் கூறுகிறது.

குறமகள்

முருகியம் நிறுத்து முரணினர் உட்க

முருகாற்றுப் படுத்த உருகெழுவியனகர்”

என்பது அந்நூல் கூறும் கூற்று ஆகும். நாத் திகர் மேல் கருத்து முதல்வாதிகள் கொண்டிருந்த வெறுப்பையும் சினத்தையும் அந்நூல் குறமகள் கூற்றாக வைத்துக்கூறுகிறது.

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரி பாடலில் கடுவன் இளவெயிளனார் என்ற புலவர் “மறுபிறப்பு இல்லை” என்போரான பொருள் முதல்வாதிகளை மடவோர் என்று இகழ்ந்து கூறினார்.

“செறுநீ நெஞ்சத்துச் சினம் நீடினோரும்

சேரா அறத்துச் சீரிலோரும்

அழிதவப் படிவத்து அயரியோடும்

மறுபிறப்பு இல் என்னும் மடவோரும் சேரார்

நின்னிழல்”                    – பரிபாடல்.

(உயிர்களைச் செறுகின்ற தீய நெஞ்சத்தில் சினத்தையுடையோரும், அறத்தோடு பொருந் தாத, புகழ் இல்லாதவர்களும் கூடாவொழுக்கத் தால் தவ விரதங்களை அழித்தவர்களும் இப் பிரவியின் நுகர்ச்சியே உண்மை, மறுபிறப்பு இல்லை என்னும் மடவோரும் ஆகிய இவர்கள் முருகனின் அருளைப் பெற மாட்டார்கள்) என்று கூறுவதுடன் நாத்திகரான பொருள்முதல்வாதி களை உயிர்களைச் செறுகின்ற சினத்தை நெஞ் சில் கொண்டிருப்போரும் அறத்தோடு பொருந் தாதவர்களும் கூடாவொழுக்கத்தால் தவவிரதங் களை அழித்தவர்களுமான கீழ்மக்களுடன் சேர்த்து இகழ்கிறார்.

திருவள்ளுவர் இன்னும் ஒருபடி மேலே சென்று நாத்திகரான பொருள் முதல்வாதி களைப் பேய் என்று கூறி இகழ்கிறார்.

“உலகத்தார் உண்டென்பதில்லான் வையத்து

அலகையா வைக்கப் படும்” – குறள் 850

என்பது அவர் கூற்று (அலகை – பேய்)

“உயர்ந்தோர் பலரும் உணடு என்பதோர் பொருளைத் தண்டில்லறிவால் இல்லை என்று சொல்லுவான் மகன் என்று கருதப்படான், வையத்துக் காணப்படுவதோர் பேய் என்று கருதப்படும்” என்பது இக்குறளுக்குப் பரிமே லழகர் கூறியுள்ள உரையாகும்.

பகுத்தறிவுக் கொள்கைகளை மக்களிடையே பரப்பிய சார்வாகர் உலோகாயதர் முதலான பொருள்முதல்வாதிகளையும் அவர்தம் நூல் களையும் அழித்தொழிப்பதில் கருத்து முதல் வாதிகளான பார்ப்பனப் புரோகிதர்கள் முனைப் புடன் செயல்பட்டனரஹ். அத்தகையவர்களுடன் உறவு கொள்ளக்கூடாது என்று அரசர்களுக்கு அறிவுரை கூறினார்கள்.

அருளும் அன்பும் நீக்கி நீங்கள்

நிரையங் கொள்பவரோடு ஒன்றாது காவல்

குழவி கொள்பவரின் ஓம்பு           – புறம் 5

(நகரத்துக்குச் செல்வோரான சிற்றினத்தா ருடன் சேராமல் நீ நின்நாட்டைக் குழந்தையைக் காக்கும் தாய் போல் காப்பாயாக) என்று அரசர் களுக்குப் புலவர்கள் அறிவுரை கூறினார்கள்.

இங்கு, “நரகத்துக்குச் செல்வோர்” என்று கருத்து முதல்வாதிகளால் சபிக்கப்பட்டவர்கள் பொருள்முதல்வாதிகளான நாத்திகரேயாவர். அவர்களையே உரையாசிரியர்கள் சிற்றினத்தார் என்று இழிவாகக் குறிப்பிட்டார்கள். அவர்களை அரசன் தனக்குத் துணைவர்ளாகக் கொள்ளக் கூடாது. தாய் தன் குழந்தையை நோய் முதலியன அணுகாதவாறு பாதுகாப்பதுபோல் அரசனும் நாத்திகரான பொருள் முதல்வாதிகள் தன் நாட்டு மக்களை நெருங்காதவாறு காக்க வேண்டும் என்று கருத்து முதல்வாதிகள் அரசனுக்கு அறி வுரை கூறினார்கள்.

நலங்கிள்ளி என்ற சோழ மன்னனைக் கண்டு உறையூர் முது கண்ணன் சாத்தானார் என்ற புலவர் சில அறிவுரைகளைக் கூறிவாழ்த்தினார். “நின் நாண்மகிழிருக்கை (தர்பார் மண்டபம்) பாணர்களால் சூழப்படுவதாக. நின் மார்பு மகளிர் தோள்களைத் தழுவுக நின் அரண்மனை முற்றத்தில் முரசு இனிதே முழங்குக. நீ கொடி யவர்களை தண்டித்தலும் நல்லோரைக் காத் தலும் செய்வாயாக. நின் சுற்றம் மகிழ்வோடு வாழ் வதாக நீ சேர்த்துப் பாதுகாத்த செல்வம் மகிழ்ச் சிக்கு உரியதாகுக” என்று அம்மன்னனை வாழ்த் தும் புலவர், “நல்லதன நலனும் தீயதன் தீமையும் இல்லை என்போர்க்கு இனன் ஆகிலியர்” (நல் வினையினது நன்மையும் தீவினையினது தீமையும் இல்லை என்பார்க்கு நீ நட்பாகா தொழிக) என்று அறிவுரை கூறுகிறார். `இல்லை என்போர் நாத்திகர்’ என்று புறநானூற்றின் பழைய உரை காரர் இதற்கு விளக்கம் கூறினார். `நாத்திகரோடு நட்புக்கொள்ளலாகாது’ என்று புலவர் அர சனுக்கு ஆலோசனை கூறினார். இங்கு, கருத்து முதல்வாதிகள் நாத்திகரான பொருள்முதல் வாதிகளை அச்சுறுத்தி ஒதுக்கிவைக்கும் செயலை நாம் காண்கிறோம்.

வேதத்துக்கு மாறுபட்ட கருத்துடையவர் களின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அன்று கருத்து முதல்வாதியான பார்ப்பார் செயல்பட்டதை ஆவூர்மூலங்கிவார் தம்பாடலில் கூறுகிறார்.

பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கவுணியன் விண்ணன்தாயன் என்பானைப் புலவர் ஆவூர் மூலங்கிழார் வாழ்த்துகிறார். அவர் அவனைப் பாடிய பாடலில் “பழைய நூலாகிய வேதத்துக்கு மாறுபட்ட கருத்துடையோரது மிகு வளர்ச்சி யைத் தடுத்துச் சாய்ப்பதற்காக நின்முன்னோர் பலவேள்விகளைச் செய்தனர். நீ அவர்களின் மரபில் வந்தவன்” என்று அவனைப் புகழ்ந்தார்.

நன்றாய்ந்த நீள் நிமிர்சடை

முதுமுதல்வன் வாய் போகா

தொன்று புரிந்த ஈரிரண்டின்

ஆறுணர்ந்த வொருமுது நூல்

இகல்கண்டார் மிகல் சாய் மார்

மெய்யன்ன பொய்யுணர்ந்து

பொய் யோரது மெய் கொளீஇ

மூவேழ் துறையும் முட்டின்று  போகிய

உரைசால் சிறப்பின் உரவோன் மறுக

– புறநானூறு

என்பது புலவர் ஆவூராரின் கூற்று.

(முதிய இறைவனாகிய சிவபெருமானது வாக்கைவிட்டு நீங்காது அறம் ஒன்றையே மேவிய நான்கு கூறுகளை உடைய தாய், ஆறங்கத்தாலும் உணரப்பட்ட ஒரு பழைய நூலாகிய வேதத்துக்கு மாறுபட்ட நூல்களைக் கண்டோராகிய புத்தர் முதலான புறச்சமயத்தாரது மிகுதியைச் சாய்க்க வேண்டி, அவரது மெய்போன்ற பொய்யை உளப் பட்டு அறிந்து, அப்பொய்யை  மெய்யென்று கருதாமல் உண்மைப் பொருளை அவர்களுக்கு ஏற்பச் சொல்லி, இருபத்தொரு வேள்வித்துறை யையும் குறையின்றிச் செய்து முடித்த புக ழமைந்த தலைமையையுடைய அறிவுடையோர் மரபில் உள்ளவன்) என்பது உரைகாரர் இவ் வடிகளுக்குக் கூறிய உரையாகும்.

இங்கு `இகல் கண்டார்’ என்னும் தொடருக்கு வேதத்துக்கு மாறுபட்ட நூல்களைக் கண்டோ ராகிய புத்தர் முதலிய புறச்சமயத்தார்” என்று பழைய உரைகாரர் உரை கூறுகிறார். இத் தொடர் புத்தர் முதலிய புறச்சமயத்தாரை மட்டு மல்லாது, உலோகாயதர் முதலான பொருள் முதல்வாதியரையும் குறிப்பதாகக் கொள்ளலாம். ஏனெனில், முரணினர் என்னும் சொல்லுக்குத் திருமுருகாற்றுப்படையில் நச்சினார்க்கினியர் “தெய்வம் இன்றென்பார்” என்று பொருள் கூறி னார். இதனை நோக்குங்கால், `இகல் கண்டார்’ என்னும் புறநானூற்றுத் தொடரும் நாத்திகரைக் குறிக்கும் எனக் கொள்ளல் தவறாகாது. எவ் வாறாயினும் வேதத்துக்கு மாறுபட்டார் அனை வரது மிகுவளர்ச்சியைச் சாய்க்க வேண்டும் என் பதில் பார்ப்பார் முனைப்பாக இருந்தனர் என் பதில் கருத்து மாறுபாட்டுக்கு இடம் இல்லை.

பகுத்தறிவாளரையும் மாற்றுச் சமயத்தாரை யும் அடாவடியாகக் கொன்றொழிக்கும் அக் கிரமச் செயல் வரலாற்றுக் காலத்திலேயே தொடங்கிவிட்டது. அக்கொடுமைகள் சங்க காலத்திலும் நிலைபெற்றிருந்தன என்பதற்கு நக்கீரர் எரிக்கப்பட்ட நிகழ்வு தக்கதொரு சான் றாகும். அக்கொடுஞ்செயல் சம்பந்தர் காலத்தில் தொடர்ந்து இன்றும் நீடிப்பது வரலாற்றின் சோகம்தான். இக்கொடுமைகளை முறியடிக்க முனைப்புடன் செயல்பட வேண்டியது முற்போக் காளர்களின் தலையாய கடமையாகும்.

 

–வெ. பெருமாள்சாமி

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்