திருப்புமுனையில் உலகம் உலகமயமாக்கலின் நெருக்கடி (3)

1033
0
SHARE

முதலாளித்துவ அமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி அதன் இயல்பிலிருந்து பிறழ்ந்து ஏற்பட்டதல்ல. இந்நெருக்கடி முத லாளித்துவ பொருளாதார மற்றும் சமூக அமைப் பின் இயல்பிலிருந்தே தோன்றியதாகும். முத லாளித்துவ பொருளாதாரத்தில் கிராக்கி என்பது ஒரு தொடர் பிரச்சினையாகும். பேரா சிரியர் பிரபாத் பட்னாயக் சுட்டிக்காட்டியபடி, முதலாளித்துவம் என்பது இயல்பிலேயே கிராக்கியின் தொய்வால் கட்டுண்ட அமைப் பாகும்.  இதனால் மிக விரைவாக வளரும் உற்பத்தி சக்திக்கும், மந்தமாக வளரும் நுகர்வு சக்திக்கும் இடையே எப்போதும் ஒரு இழுபறி இருந்து கொண்டே இருக்கின்றது. விளம் பரங்கள் மூலம் நுகர்வுத் தன்மையை வளர்க்க முயற்சித்த போதும், எதுவும் நெருக்கடியை இல்லாமல் செய்யும் அளவிற்கு பலனளிப்ப தில்லை. நுகர்வு சக்தியை வளர்க்க இந்த நடவடிக் கைகள் போதுமானதாக இல்லை. எனவே முத லாளித்துவ அமைப்பு அடிக்கடி நெருக்கடியில் சிக்கிக் கொள்கிறது.

ஆக, முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த போக்கே மாறி மாறி பெருக்கமும் மந்தமும் உள்ள வணிகச் சுழற்சிகள் கொண்டதாகவே இருக்கும்.

உலகமயமாக்கலின்

நடப்பு நெருக்கடிகள்:

தற்போதைய உலகளாவிய முதலாளித்துவம் எதிர்கொண்டுள்ள நடப்பு நெருக்கடிக்கென்று பிரத்தியேகமான அம்சங்கள் உள்ளன. எனவே தான் இக்கட்டுரையில் ஒருமையில் குறிப்பிடா மல் பன்மையில் அவற்றை உலகமயமாக்கலின் நெருக்கடிகள் என்று குறிப்பிட்டுள்ளோம். இத்துடன் உலக தட்பவெப்ப நிலை நெருக் கடியும் உருவாகியுள்ளது. இந்நெருக்கடி, இயற் கைச் செல்வாதாரங்களை நேர்மையான, ஒழுங்கு முறையுடன் பயன்படுத்தும் வழிமுறைகள்  இல் லாத, தனியார் லாபத்தை மட்டுமே அடிப்படை யாகக் கொண்டு  இயங்கும் பொருளாதார அமைப்பின் விளைவாகவே உருவாகியுள்ளது. உலக ஊக நிதி மூலதனம், உலகச் சந்தைப் பொருட்களின் வியாபாரத்தில் இஷ்டம் போல் விளையாடுகின்றன. இப்போக்கு,  நவீன தாராள மயக் கொள்கைகளுடன் இணைந்து செயலாற் றும் போது, மோசமான விளைவுகளை உருவாக் கியுள்ளன. இதன் காரணமாக  உணவு நெருக் கடியும் உருவாகியுள்ளது. லாப நோக்கால் மட் டுமே  உந்தப்பட்டு இயங்கும் முதலாளித்துவ அமைப்பு இன்னும் எப்படிப்பட்ட நெருக்கடி களையெல்லாம் உருவாக்கும் என்பதை நாம் அனுமானிக்க முடியாத நிலையில் உள்ளோம். நீண்ட கால அடிப்படையில் மனித குலமே தப்பிப் பிழைப்பதும், மனித நாகரிகம் தொடர் வதும் நிச்சயமற்ற நிலைக்கு தள்ளப்பட்டு கேள்விக்குறியாகி உள்ளது. இதில் நன்கு கண் ணுக்குப் புலப்படுவது,மிக அதிகமாக ஊடகங்க ளால் வெளிச்சம் போட்டுக் காட்டப்படும்  உலகப் பொருளாதார மந்த நிலைமையே. சமீப வாரங்களிலும், மாதங்களிலும்  யூரொஜோன் எனப்படும் ஐரோப்பிய நிகழ்வுகள் மீது  அதிகமாக கவனம் செலுத்தப்படுகின்றது.

இந்நெருக்கடிக்குக் காரணங்களாக கிரீஸ், ஸ்பெயின், இத்தாலி, அயர்லாந்து, போர்ச்சுக்கல் போன்ற நாடுகளின் அரசுகளும் மக்களும் ஊதாரித்தனமான மற்றும் வரவுக்கு மீறிய செலவினங்களை மேற்கொண்டதுதான் என்ற பிரச்சாரம் நடத்தப்படுகின்றது. ஆனால் உண்மையில் இந்நாடுகளின் அரசுகள் வாங்கிய கடன்கள் நெருக்கடிக்குக் காரணம் இல்லை; மாறாக இந்நிலைமைக்குப் பொறுப்பேற்க வேண்டியது இந்நாடுகளின் மீது உலக அளவில் செயல்படும் ஊகவணிகம் தொடுக்கும் தாக்குதல் களேயாகும். இந்த ஊக வணிக அசுரனின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டின் அரசுகளால் எடுக்கப்படும் முயற்சிகள் அனைத்தும்  முறியடிக்கப்படுகின்றன. மேலும் நவீன தாராளமயம் தத்துவார்த்த  ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தும் நிலையும் உள்ளது. எனவே இன்றைய நிலைமையில்  நிதி மூலதனம் உலக அளவில் செயல்படுகிறது; உலகின் எந்த அரசின்கட்டுப் பாடுகளுக்கும் அது அடங்க மறுக்கின்றது; இஷ்டம் போல் தங்கு தடையின்றி  எல்லை களைத் தாண்டி நாடு விட்டு நாடு போகும் இயல் புடையதாக உள்ளது. இதனால் பலம் பொருந்திய பெரிய நாடுகளின் அரசுகள் உள்பட அனைத்து நாட்டு அரசுகளும்  ஊக வணிகச் செயல்பாடுகளை கட்டுப்படுத்த இயலாமல் செயலிழந்த நிலைமையில் உள்ளன. நிதி ஊக வணிகம் ஒவ்வொரு நாட்டிலும் உருவாக்கும் நெருக்கடிகளுக்கு பதிலடி கொடுக்க  முடியாமல் அந்நாட்டு அரசுகள் திணறுகின்றன.

2008 நிதி நெருக்கடிக்குப் பின் நிதி மூலதனம் உலக அளவில் ஒரளவுக்கு அடக்கி வைக்கப் பட்டது; ஆனால், ஊக வணிக சக்திகள் தங்கள் பலம் அனைத்தையும் திரட்டி மீண்டும் ஒன்று கூடி செயல்படுகின்றன.  எந்த ஒரு நாட்டின் அரசு விதிக்கும் கட்டுப்பாட்டையும் நிதி மூலதனம் மதிப்பதில்லை; ஐ.எம்.எஃப் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாடுகளும் நிதி மூல தனத்தை கட்டுப்படுத்துவதில்லை. இவ்வாறு எதற்கும் கட்டுப்படாமல்  நாடுகளை நாசமாக்கி சூதாடி லாபம் ஈட்டும் வகையில் இயங்குவதில் நிதி மூலதனம் வெற்றி பெற்றுள்து. நவீன தாரள மயம் என்ற தத்துவம் நவீன செவ்வியல் பாரம் பரியத்தைச் சாராத பொருளாதார வல்லுனர்க ளால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட தத்துவ மாகும். ஏன்?, 2008 நெருக்கடியின் போது அது அதிகாரப்பூர்வமாகவே கைவிடப்பட்ட கொள் கையாகும். இருந்த போதிலும் உலகின் முத லாளித்துவ அரசுகளின் கொள்கைகளை தீர் மானிக்கும் சக்தியாக அது தொடர்கிறது. நிதி மூலதனம் இவ்வாறு  செயல்படுவது வெறும் தத்துவ பலத்தினால் மட்டுமல்ல. அதனிடம் உள்ள செல்வக்குவிப்பு அதற்கு அரசியலில் மிகுந்த செல்வாக்கு அளிக்கிறது.

ஐரோப்பிய, அமெரிக்க நாட்டு அரசுகள் தங்கள் நாடுகளில் ஏற்பட்டுள்ள தீவிரமான பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண முடிய வில்லை. ஜப்பான் நாட்டிலும் பொருளாதாரத் தேக்கநிலை தொடர்ந்த வண்ணமாகவே உள்ளது. இந்நிலை யில் எழுந்து வரும் பொருளா தாரங்கள் என்று போலியான கரிசனத்துடன்  அழைக்கப்படும் சீனா,  இந்தியா, பிரேஸில், தென்ஆப்பிரிக்கா நாடுகளின் பொருளா தாரங்கள், தேங்கிக்கிடக்கும் பெரும் பொருளா தாரங்களைத் தூக்கி நிறுத்த உதவும் என்ற வாதம் நம்ப முடியாத வாதமாகும். ஏனெனில்  இந்நாட்டு பொருளாதாரங்கள் அளவில் சிறியவை மட்டு மல்ல; அவைகள் பணக்கார நாடுகளுக்கு செய்யும் ஏற்றுமதிகளையே நம்பி உள்ளன. எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ஊக வணிக சக்திகள் இந்நாடுகளின்  சுயேச்சையான நிதிப் பெருக்கத்தை அனுமதிக்காது. அனைத்து நாடு களும் ஒருங்கிணைந்து ஊக வணிகத்துக்கும் நிதி மூலதனத்திற்கும் எதிராக செயல்படும் நிலைமை களும் இல்லை. எனவே உலக அளவிலான பொருளாதாரப் பெருக்கம் என்பது நடக்காத காரியமாகவே உள்ளது. நிதி மூலதன உலகமய மாக்கலின் ஆதிக்கம் எங்கும் தொடர்கிறது.

எழுச்சிமிக்க மக்கள் இயக்கங்கள்:

இதுவரை நம் முன் நடந்து கொண்டிருக்கும் உலகமயமாக்கலின் எதிர்மறை அம்சங்களைப் பற்றி விவாதித்தோம். அதே சமயத்தில் நம் முன் நடக்கும் சாதகமான அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.. உலகப் பொருளாதார நெருக்கடி உருவானதிலிருந்தே சாதாரண மக் களின் சீற்றம்  அதிகரித்துக் கொண்டே வந்துள் ளது. குறிப்பாக இது வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் நிதிமூலதனக் கும்பலை நோக்கியும், அவர்களுக்கு சலுகைகளை வழங்கி ஆதரிக்கும் அந்நாட்டு அரசுகள் மீதும் பாயத் துவங்கியுள் ளது. மக்களின் எதிர்ப்புகள் பல்வேறு வடிவங் களை எடுத்துள்ளது. கடந்த சில மாதங்களில் பிரம்மாண்டமான இயக்கம் தோன்றியுள்ளது. அதுதான் கைப்பற்றுவோம் இயக்கம் முதலில் செப்டம்பர் 17 அன்று  உலக நிதி மூலதனத்தின் தலைமையகமான, நியூயார்க் நகரத்தின், வால் ஸ்ட்ரீட்ஐ எதிர்ப்பாளர்கள் கைப்பற்றி முகாமிடத் துவங்கினர். அவர்கள் போராட்டத்தின் முக்கிய இலக்கு, 2008ல் நிதி நெருக்கடி உருவாவதற்கு காரணமான முதலீட்டு வங்கிகளும், மற்ற நிதி நிறுவனங்களும்தான். தாறுமாறான சந்தைச் செயல்பாடுகளையும், ஊக நிதிச் சூதாட்டங் களையும் கையாண்ட இந்நிறுவனங்களை, நெருக் கடிக்குப் பொறுப்பாக்கி அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று எதிர்ப்பாளர்கள் கோரிக்கை எழுப்பியுள் ளனர். மூழ்கிக் கொண்டிருக்கும் இந்நிறுவனங் களைக் காப்பாற்றும் வகையில் எந்த பண உத வியும் அரசுகள் மேற்கொள்ளக்கூடாது என்ற கோரிக்கையையும் எதிர்ப்பாளர்கள் எழுப்பியுள் ளனர். இந்த இயக்கம் உலகின் பல பகுதிகளுக்கும் பரவியுள்ளது என்பது  மட்டுமல்ல; உள்ளடக்கத் திலும், கோரிக்கைகளின் தன்மையிலும் கூட பெரும் வீச்சை இந்த இயக்கம் அடைந்துள்ளது. வால் ஸ்ட்ரீட் டைக் கைப்பற்றுவோம் என்பதி லிருந்து ஒரு பரந்த அளவிலான கைப்பற்றும் இயக்கமாக மாறியுள்ளது. அமெரிக்க நாட்டின் மற்ற நகரங்களுக்கும், மற்ற பணக்கார நாடு களுக்கும் அது பரவியுள்ளது. நிதி மூலதனத்தி னால் பெரும் லாபங்களை தமது சொந்த வாழ் வில் ஈட்டியுள்ள நியூயார்க் நகர மேயர் ப்ளூம் பெர்க் இரவோடு இரவாக பலவந்தமாக எதிர்ப் பாளார்களை வெளியேற்ற முயன்றார். ஆனால் இந்நடவடிக்கை எதிர்ப்பாளர்களின் மன உறு திக்கு மேலும் வலுவையே ஊட்டியது. அத்துடன் இயக்கம் விரைவாக பல நகரங்களுக்கும் பரவ உதவிற்று.

இந்த இயக்கத்தால் சமூகத்தின் பல தரப்பட்ட பகுதி மக்களையும்  தன்பால் ஈர்க்க முடிந் துள்ளது.. கல்விக் கடன்களின் தவணைகளைக் கட்ட முடியாத மாணவர்கள், வீட்டுக் கடன் களைக் கட்ட முடியாது தவிக்கும் மக்கள், பொரு ளாதார நெருக்கடியால் வேலையிழந்தோர், சமூக பாதுகாப்புச் செலவினங்களை அரசு வெட்டிய தால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் என்று பல தரப்பினரும் இயக்கத்தில் பங்கேற்றனர்.

நாட்டின் பொருளாதார அமைப்பின் காரண மாக மக்கள் வேலைகளை இழந்துள்ளனர். தாங்க முடியாத கடன் சுமை ஏற்றப்பட்டுள்ளது. விரும் பிய கல்வியைத் தொடர முடியாத நிலையும் ஏற் பட்டுள்ளது, மக்களின் கோபம் தங்களுக்கு ஏற் பட்டுள்ள நிலைமைகளின் மீது மட்டுமல்ல; அது வேறு பக்கமும் பாய்ந்துள்ளது. நாட்டில் ஏற் பட்டுள்ள பொருளாதார, நிதி நெருக்கடிக்கு முதற்கண் காரணமாக இருந்தவர்கள் வங்கிகளும் ஊக நிதி வணிகம் செய்பவர்களுமே. இவர்களை காப்பாற்றுவதற்கும் கைதூக்கி விடுவதற்கும் ஏதுவாக அரசு பண உதவிகளை வாரி வழங்கு கின்றது. பெரும் பணக்காரர்களுக்கு வரிச் சலுகை களை வழங்குகின்றது. அதே சமயம் பட்ஜெடில் துண்டு விழக்கூடாது என்ற நிலைபாட்டை எடுத்துக் கொண்டு பட்ஜெட்டில் விழும்  துண் டைக் குறைப்பதற்காக சமூகப் பாதுகாப்பு செல வினங்களை அரசு குறைத்துக்கொண்டது. வேலையின்மை விகிதம் யாரலும் ஏற்றுக் கொள்ளமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. எனவே மக்களின் கோபம் அரசின் நடவடிக் கைகள் மீதும் சூழ்நிலைமைகள் மீதும் திரும்பி யுள்ளது. கைப்பற்றும் இயக்கங்கள், மிகச் சிறந்த கோஷம் ஒன்றை உருவாக்கி, நவீன தாராளமய பொருளாதார  அமைப்பின் காரணமாக  உரு வாகியுள்ள ஏற்றத்தாழ்வுகளையும், அநீதிகளை யும் சாடுகின்றன.. இந்தப் பொருளாதார அமைப்பு, பச்சையாக, ஜனநாயகமற்ற அமைப் பாக இயங்குவதையும் சுட்டிக்காட்டுகின்றன.

அந்தக் கோஷம், நாங்கள் 99  சதவீதத்தினர் என்பதுதான்.. இக்கோஷம் நவீன தாராளமய அமைப்பு என்பது, , பண முதலைகளுக்கு சாதக மான முதலாளித்துவ அமைப்பு என்பதையும், சாதாரண மக்களுக்கு எதிரானது என்பதையும், சமத்துவமற்ற, அநீதியான அமைப்பு என்பதை யும் தெளிவாக்குகின்றது. 99 சதவீதமாக உள்ள பெரும்பான்மை மக்களின் கோரிக்கைகளைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் அரசின் தன் மையை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் இக்கோஷம் உள்ளது. நாட்டின் பொருளாதார அமைப்பு சமூகத்தில் மிகச் சிறுபான்மையாக உள்ள  செல்வம் நிறைந்த மக்களின் நலன் களுக்கே சேவை செய்கிறது என்பதையும், சாதாரண உழைக்கும் மக்களையோ, நடுத்தர வர்க்கத்தையோ கண்டு கொள்வதில்லை என் பதையும் பளிச்சென்று புரியும் வகையில் எடுத்துச் சொல்கிறது. கைப்பற்றும் இயக்கங்களில் பல பலவீனங்களும் இல்லாமலில்லை. ஒருங் கிணைந்த திட்டம் ஏதும்  இல்லாமலேயே இயக்கம் உள்ளதை பார்வையாளர்கள் ஆதர வாளர்கள் உட்பட-  அனைவரும்-சுட்டிக் காட்டி யுள்ளனர். இயக்கத்திற்கு நாட்டின் (பொருளா தார, அரசியல்) அமைப்பு குறித்து தெளிவான புரிதல் இல்லை என்பதையும் கூறுகின்றனர். தற்போது ஆதிக்கம் செய்யும் பொருளாதார அமைப்பில் அரசு வகிக்கும் பங்கு குறித்தும், பல்வேறு சமூக வர்க்கங்கள் வகிக்கும் பங்கு குறித்தும் பொதுவான புரிதலை இந்த இயக் கங்கள் எட்ட வேண்டியுள்ளது.

பொதுவான கோரிக்கைப் பட்டியல்களை இயக்கம் உருவாக்கவில்லை. அதன் அடிப்படை யில்தான்  இயக்கத்தின் எதிர்கால நடவடிக் கைகள் அமைய முடியும்.  கைப்பற்றுவோம் இயக்கம் உலக அளவில் ஏகாதி பத்தியம் ஆற்றும்  கேந்திரமான பங்கினைப் புரிந்து கொள்ள வில்லை என்ற கருத்திலும் உண்மை உள்ளது. இவ்வாறு பலரால் பலவித மான பலவீனங்கள் கொண்டதாக கருதப் பட்டாலும், இந்த இயக்கம் பல புதுமையான வழிமுறைகளையும் பாதை களையும் கண்டுள்ளது. போலீஸ் அடக்குமுறை களை எதிர்த்து நின்று கடுமையான குளிர் காலத்திலும் போராட்டங்கள் தொடர வழி வகைகள் செய்துள்ளது. மேற்கூறிய பலவீனங் களை களைந்தெறிந்து இயக்கம் மேலும் முன் னேறிச் செல்லும் என்று நம்புவதற்கு இடம் உள்ளது. எப்படியிருப்பினும் இந்த இயக்கம் நவீன தாராளமயத்துக்கெதிராக போராடு பவர்களுக்கு மட்டுமல்லாமல், ஏகாதிபத்தி யத்தின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுபவர் களுக்கும், நிதி மூலதனத்தின் கொள்ளைகளை எதிர்த்துப் போராடுபவர்களுக்கும் உந்துசக்தி தரும் ஊற்றுக்கண்ணாக உள்ளது. கைப்பற்று வோம் இயக்கங்களின் வீச்சையும் அதன் வேக மான பரவலையும் ஒப்பிடும் போது, (இவ் வியக்கங்கள் மிக பரபரப்பாக இயங்கிய) மேற் கத்திய நாடுகள் உட்பட,  எந்த நாட்டின் அச்சு ஊடகங்களும், தொலைக்காட்சி ஊடகங்ககளும் இவ்வியக்கங்களுக்கு தேவையான முக்கியத் துவத்தை அளிக்கவில்லை என்பதை நாம் காண முடிகிறது. ஆரம்பத்தில் இந்த இயக்கங்களை அவர்கள் கண்டுகொள்ளவில்லை; கேலி களையும்-வசைகளையும் வீசினர். மக்களின் ஆதரவு இவ்வியக்கங்களுக்குப் பெருகுவதைக் கண்ட பின்னர்தான் தங்கள் போக்கை சற்று மாற்றிக் கொண்டனர். இந்திய ஊடகங்களிலும், பொதுவாக, ஒரு சில விதிவிலக்குகள் தவிர, மிகக் குறைந்த அளவிலேயே இவ்வியக் கங்களைப் பற்றிய செய்திகளுக்கு  இடம் தந்தனர். உள்நாட்டு, வெளிநாட்டு பெரு நிறுவனங்களிடம் இந்திய ஊடகங்கள் காட்டும் அடிமைப் புத்தியைக் காணும்போது, இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

கைப்பற்றுவோம் இயக்கங்கள் நடந்த அதே சமயத்தில் ஐரோப்பாவில் போராடும் உழைக்கும் வர்க்கமும் எழுச்சி பெற்றது. மாபெரும் போராட் டங்களை அது நடத்தியது. ஆனால் ஊடகங்கள் கைப்பற்றுவோம் இயக்கங்களுக்குக்கு தந்த நேரத்தை விட மிகக் குறைவான நேரத்தையும், முக்கியத்துவத்தையும்  இப் போராட்டங்களுக்கு அளித்தன. எனினும் இப்போரட்டங்கள்,  திருப்பு முனையில் உள்ள, இன்றைய உலகச் சூழ்நிலை யில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

கிரேக்க அரசும் பன்னாட்டு மூலதனமும் இணைந்து கிரேக்க உழைக்கும் மக்கள் தலையில் பெரும் சுமைகளை சுமத்தும் முயற்சிகளை எதிர்த்து கடந்த இரண்டு வருடங்களாக, கிரேக்க உழைக்கும் வர்க்கம், போர்க்குணம் மிக்க கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் போராடி வருகின்றது. கிரேக்க நாட்டில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு கிரேக்க நாட்டுத் தொழிலாளிகள் எந்த விதத்திலும் பொறுப்பில்லை.  சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சிக்குப் பிறகு நவீன தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றும் அரசுகள் மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்த மறுக்கின்றன; ஓய்வூதியத் திட்டங்களை தனியார்மய மாக்குகின்றன; வேலை வாய்ப் பின்மைக்கு வழங்கப்படும் உதவித் தொகைகளை நிறுத்திவிட்டன; உழைக்கும் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைக ளின் மீது தாக்குதல்களைத் தொடுத்துள்ளன; இதனால் ஐரோப்பாவில் பல நாடுகளில் உழைக்கும் வர்க்கத்தின் போராட்டங்கள் அதி கரித்துள்ளன.

2008 பொருளாதார நெருக்கடிக்குப்பின், இத்தகைய போராட்டங்களின் வீச்சும் பரப்பும் இது வரை போராட்டக் களங்களை கண்டிராத உழைக்கும் மக்களையும் பெருமளவு சென்றடைந் துள்ளது என்பதே  குறிப்பிடப்பட வேண்டிய  அம்சம் ஆகும். குறிப்பாக சமீப மாதங்களில் நடந்த போராட்டங்களில் இது தெளிவாகப் புலப்பட்டது. ஃப்ரான்ஸ் நாட்டின் மாணவர்கள், உழைக்கும் வர்க்கத்தின் துணையுடன், முதல் பணியில் சேரும் எந்த தொழிலாளியையும் முதலாளிகள் விருப்பம்போல் வீட்டுக்கு அனுப்ப உரிமை தரும் சட்டத்தை எதிர்த்த போராட்ட மானாலும், கிட்டத்தட்ட அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் ஓய்வூதியப் பிரச்சினையின் பேரில் நடந்த போராட்டமானாலும்,

நிதி மூலதனம் மற்றும் ஐரோப்பாவின் பலம் மிகுந்த நாடுகளான ஜெர்மனி ஃப்ரான்ஸ் ஆகியவற்றின் நிர்பந்தத்துக்கு எந்த வித  எதிர்ப்புமின்றி, அடிபணிந்து, கிரேக்க நாட்டு அரசு சிக்கன நடவடிக்கைகளை மக்கள் மீது திணிக்கும்போது அதை எதிர்த்து நிற்கும் கிரேக்க தொழிலாளி-பொதுமக்கள் கூட்டணியின் தீவிரமான போராட்டமானாலும்,

நவம்பர் 30, 2011,ல் பிரிட்டனில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க பொதுத்துறை ஊழியர்களின் போராட்டமானாலும், ஒரே விஷயத்தைத்தான் உறுதிப்படுத்துகின்றன.

அது வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளின் உழைக்கும் வர்க்கம் போர்க்குணமிக்க காலகட்டத்தை எட்டியுள்ளது என்பதேயாகும். இப்போராட்டங்கள் இயல்பாகவே முற்போக்கு சக்திகளுக்கு வலு சேர்க்க உதவிடும் என்று உறுதி கூறி விட முடியாது. உண்மையில் உழைக் கும் வர்க்கத்துக்கு எதிரான ஒழுங்கு முறைகளைத் தூக்கிப் பிடிக்கும் ஒரு சில  வலதுசாரி சக்திகள்,  இந் நிலை மைகளை  பயன்படுத்திக்கொண்டு, அன்னியர் மீது  வெறுப்பு, ஃபாசிசம்  போன்றவற்றைத் தங்கள் நாட்டில் தூண்டிவிட முடியும். எனினும் இருபது வருடங்களாக தன்விருப்பப் படி புகுந்து விளையாடிக் கொண்டி ருந்த நவீன தாராளமயத்தின் பெயர்  மக்கள் மத்தியில் மிகவும் கெட்டுப் போயுள்ளது. எனவே இந்நாடுகளின் அரசியல் வர்க்க சக்திகளின் பலா பலங்களில் ஏற்படும் மாற்றம் முற்போக்கு சக்திகளுக்கு சாதகமான சூழலை உருவாக்கும் வாய்ப்பு நிச்சயமாக உள்ளது.

உலகின் மற்ற பகுதிகளிலும் முக்கியமான மாற் றங்கள் ஏறபட்டு வருகின்றன. மேற்கத்திய நாடுகள் மனிதாபிமான அடிப்படை என்ற போர்வையில் சுதந்திரமான நாடுகளின் மீது தொடுத்துவரும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு அங்கீகாரம் வழங்க  சில சமயம் ஐ.நா.வைத் துணைக்கு அழைத்துக் கொள்கின்றன; சில சமயம் எதற்கும் கவலைப்படாமல் நேரடியாக தாக்குதல்களைத் தொடுக்கின்றன. சோவியத் யூனியன் சீர்குலைந் ததும், அமெரிக்க நாட்டின் ஆதிக்கத்தில் ஒற்றைத் துருவ உலகம் உருவானதுமே இத்தகைய போக்கு களுக்கு மூல காரணங்களாகும்.

அதே நேரத்தில், உலகம் முழுவதும் ஜனநாயக உரிமைகளுக்காகவும், சிறப்பான வாழ்க்கைக் காகவும், மேம்பட்ட வாழ்நிலைமைகளுக்காகவும், மக்கள் இயக்கங்கள் அதிக அளவில் எழுச்சி யுடன் நடப்பதையும் நாம் காண்கிறோம். முக்கிய மாக, மேற்கத்திய நாடுகள் பொருளாதார தேக்க நிலையை அடைந்தூள்ளன; அதே சமயம் இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென் ஆப் பிரிக்கா போன்ற நாடுகள் உலக அளவில் ஒருங் கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண் டுள்ளன.

தற்போதைய உலக சூழ்நிலைமைகளை அறிந்து கொள்வதற்கும், இவற்றில் உள்ள சாத்தி யங்களை புரிந்து கொள்வதற்கும்  உதவக் கூடிய காரணிகளாக மேற்கூறியவை உள்ளன.

இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்க்கும்போது உலகம் ஒரு திருப்பு முனையில் உள்ளது என்பதும், முதலாளித்துவ உலகமயமாக்கல்  பலவிதமான  உள் நெருக்கடி களைக் கொண்ட கடுமையான, மாபெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது என்பதும் தெளி வான விஷயமாகும்.

அறிவுஜீவிகளின் உலகத்தில் 1991க்கும் 2011க்கும் இடையே பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக வளர்ச்சியடைந்த நாடுகளிலும், நவீன தாராளவாதிகளின் எண்ணப்போக்கிலும் இவை ஏற்பட்டுள்ளன. 1991ல் வரலாறு முடிந்து விட்டது என்ற முழக்கத்தை வெற்றிக்களிப்புடன் ஒலித் தனர்; ஆனால் 2011ல், அவர்களிடையே,  முத லாளித்துவத்தின் எதிர்காலம் குறித்து அவநம் பிக்கை உருவாகியுள்ளது.  அது ஒரு பொரு ளாதார அமைப்பாக/அரசியல் அமைப்பாக தொடர்ந்து   இயங்குவது குறித்து சந்தேகங்கள் தலை தூக்கியுள்ளன.

ரஷ்ய நாட்டு தேர்தல் முடிவுகளும் காற்று மாறி வீசுவதையே காட்டுகின்றன. ஜனநாயகத் தையும் சமூக முன்னேற்றத்தையும் முன்வைத்து  போராடுவதற்கு, நடப்பு உலக நிலைமைகள் உருவாக்கித் தந்துள்ள வாய்ப்புகளை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது  என்பது உலகின் முற்போக்கு சக்திகளின் கைகளிலேயே உள்ளது.

இந்தியச் சூழலில் இதன் பொருள்: ஊழல் மலிந்த, நவீன தாராளமய ஆட்சிகளுக்கு எதிராக இன்னும்  பரந்த அளவில் உழைக்கும் மக்களை திரட்ட வேண்டும்.

மக்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகளுக்காகப் போராட வேண்டும் என்பதே ஆகும்.  வாழ்நாள் முழுவதும் ஜனநாயகம், சமூக முன்னேற்றம் வேண்டி உழைக்கும் மக்களுக்கான போராட்டங் களுக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த தோழர் தாரகேஷ்வர் சக்ரவர்த்திக்கு நாம் செய்யும் தகுதியான அஞ்சலியாக இது அமையும்.

 

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்