நக்சல்பாரிகளும் – மாவோயிஸ்ட்டுகளும்

622
0
SHARE

 

நக்சல்பாரி இயக்கத்தை உருவாக்கிய மூன்று தலைவர்களில் மிச்சமிருந்த கனுசன்யால், நோய் உபாதைகளால் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். சாருமஜூம்தார், ஜங்கால் சந்தால், கனுசன்யால் ஆகிய மூவரும்தான் நக்சல்பாரி இயக்கத்தை துவக்கினார்கள். இவர்களில் சாரு மஜூம்தார் ஒரு வசதியான நிலப்பிரபுத்துவக் குடும்பத்தில் பிறந்தவர். ஜங்கால் சந்தால் பூர்வகுடியைச் சேர்ந்தவர். கனுசன்யால் ஜல்பைகுரி நீதிமன்றத்தில் குமாÞதாவாகப் பணியாற்றியவர். பின்பு நக்சல்பாரி இயக்கத்தின் பத்திரிகையான “வர்க்கப்போராட்டம்” இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

இம்மூவரில் கனுசன்யால்தான் ஆயுதமேந்திய தாக்குதலை நியாயப்படுத்தும் தத்துவ ஆசானாக விளங்கினார். நாடு அடிமைப்பட்டிருந்த காலத்தில் வங்காளத்தில் நடந்த தெபாகா போராட்டம், தெலங்கானா போராட்ட அனுபவங்களை உள்வாங்காமல் அதனைத் தொடர்வதாகக் கூறி தனிநபர் பயங்கரவாதத்தால் புரட்சி வெடிக்கும் என்று அவர் நியாயப்படுத்தினார். ஆனால் தெலங்கானா போராட்டம், நாடு தழுவிய நீல மீட்சி போராட்டமாக விரியாத நிலையில் ஆட்சி கைக்கு வந்தவுடன் பெருமுதலாளி வர்க்க கட்சியாக இருக்கும் காங்கிரÞ, சோசலிசத்தை கொண்டு வரப்போவதாகக் கூறி ராணுவத்தை ஏவி அப்போராட்டத்தை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது. அதன் படிப்பினைகளில் ஒன்று ஒரு நாடு தழுவிய வெகு ஜன புரட்சி கட்சியாக கம்யூனிஸ்ட் இயக்கம் வளர்ப்பதின் அவசியத்தை உணர்த்தியது. அதனை இந்த நக்சல்பாரி தலைவர்கள் ஏற்க மறுத்து தனி நபர் பயங்கரவாதமே சிறப்பென கருதினர்.

பல நில உச்சவரம்பு சட்டங்கள் பூதான இயக்கங்கள் ஏமாற்று வேலையாக இருந்த சூழலில் நக்சல்பாரியில் 1967-ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் நாள் இந்த இயக்கம் துவங்கியது. இதன் நோக்கம் நிலத்தை நிலமற்ற விவசாயிகள் கைப்பற்றுவது, நிலபிரபுக்களின் குண்டர்களையும், காவல் துறையினரையும் கொல்வதின்மூலம் அந்த மக்களுக்கு நம்பிக்கையூட்டுவது என்பதே, அரசியல் அதிகாரம் யார் கையிலிருந்தாலும் பரவாயில்லை, இந்த இயக்கம் பரவி வெற்றிபெறும் என்று இதை துவக்கியவர்கள் சிறுபிள்ளைத்தனமாக கருதினர். மேற்கு வங்கத்தில் இடது சாரி இயக்கத்தின் வலு காரணமாகவும் பலமான விவசாய சங்கத்தின் மூலம் கிராம மக்களின் ஆதரவோடு நில உச்சவரம்பு சட்டத்தின்படி  நில விநியோகம் ஆனதால் நக்சல் பாரி இயக்கம் வலுவிழந்தது. மற்ற இடங்களில் அது கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாகியது, மக்களும் அந்தப் பாதையை ஏற்கவில்லை.

ஆனால் இடது சாரி இயக்கம் நாடு தழுவிய முறையில் வளர்வதில் உள்ள சிரமங்களால், இன்று நிலப்பிரச்சனை, பூதாகரமாய் ஆகிவிட்டது. குறிப்பாக மலைவாழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்படும் நிலை தொடர்கிறது., நிலம் இன்று ஊக வாணிப சரக்காகி, நீதிபதிகள், அதிகாரிகள் பூர்ஷ்வாஅரசியல்வாதிகள், கிரிமினல்கள் என பல வகையில் சம்பாதித்த பணத்தை நில சொத்தாக மாற்றுவது, நிலத்தை அபகரிப்பது பொருளாதார வளர்ச்சியின் பெயரால் பன்னாட்டு நிறுவனங்கள் வன நிலங்களை கைப்பற்றுவது, சட்டப்பூர்வமான செயலாக ஆனதால் விவசாயப் பிரச்சனை மிகுந்த முக்கியத்துவம் பெற்றுவிட்டது.வனச்சட்டம் ஏட்டளவில் இருப்பதால் மலைவாழ் மக்களின் உரிமைகள் மறுக்கப் படுகின்றன. இடதுசாரி இயக்கங்கள் பரவலாகாத சூழலில்  மாவோயிஸ்ட்டுகளின் பயங்கரவாத செயலுக்கு இடமளிக்கும் நிலை உள்ளது. குட்டிபூர்ஷ்வா வர்க்கத்தின் பயங்கரவாத உணர்வு பாட்டாளிவர்க்கத்iயும் தடுமாறவைக்கிறது. வெகு ஜன புரட்சி மூலம் சாதிக்க வேண்டியதை குறுக்குவழி மூலம் அடைய முயற்சிப்பது ஈடேறாது. ஆனால் பலவகையான நோக்கமுள்ள வர்கள் இந்த போர்வையில் புகுந்துவிட்டனர். கடத்தல் பேர்வழி முதல் பூர்ஷ்வாகட்சிகளின் அடிஆள்வரை மாவோயிச முகமூடி அணிந்து கொலை, கொள்ளைகள் , ஆள்கடத்தல் இவைகளில் ஈடுபடுகின்றனர். மாவோ யார் என்று தெரியாதவர்களே இந்த இயக்கத்தில்  அதிகம் உள்ளனர்.

நக்சல்பாரி இயக்கத்தை ஒரு காலத்தில் சீனா “வசந்தத்தின் இடி முழக்கம் என்று வரவேற்றது.  ‘சின்னஞ்சிறு நக்சல்பாரியே நீ வாழ்க வளர்க’ என்று வாழ்த்துக்கூறியது. இந்த உற்சாகத்தில்  சீன உதவியுடன் சாருமஜூம்தார் நக்சல்பாரிப் புரட்சி நாடு முழுவதும் பரப்பலாம் என்று கனவு கண்டார்.ஒரு கட்டத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி தன் தவறை உணர்ந்தது. ஒரு ஆயுதம் தாங்கிய குழு புரட்சி செய்ய முடியாது மக்கள்தான் புரட்சி செய்ய முடியும் என்பதை அக்கட்சி உணர்ந்தது.

இந்தியாவில் நடைபெறும் பெருமுதலாளிகள்- நிலப்பிரபுக்களின் கூட்டணி ஆட்சியின் மீது அதிருப்தியடைந்த இளைஞர்களை நகர்ப்புறங்களிலும் திரட்டுவதற்கு சாரு முயற்சித்தார். 1969 மே மாதத்தில் மார்க்சிÞட் – லெனினிÞட் (ஆ.டு.) கட்சியை உருவாக்கினார். நாடாளுமன்றம் பன்றித் தொழுவம் என்றும் அதில் பங்கேற்பவர்கள் திரிபுவாதிகள் என்றும் அவர்கள் கொக்கரித்துப் பிரச்சாரம் செய்தனர். மேலும் விவசாயிகளின் ஆயுதப்போராட்டத்தின் மூலம் கிராமங்களை விடுதலை செய்து ஆட்சி அதிகாரத்தைப் பெறவேண்டும் என்று பேசிவந்தனர். ஆந்திராவிலும் பீகாரிலும் நிலப்பிரபுக்களின் அட்டகாசம் காரணமாக நக்சலைட் இயக்கம்  சில தளங்களை உருவாக்குவதில் வெற்றி அடைந்தனர்  .

மேற்கு வங்கத்தில் மார்க்சிÞட்டுகளைக் குறிவைத்துக் கொல்வதை நக்சலைட் இயக்கம் தனது ஆரம்ப நாட்களிலேயே துவக்கிவிட்டது. அந்தத்தாக்குதல் இன்றுவரை தொடர்கிறது. அது தற்போது மம்தா பானர்ஜியின் கூலிப்படையாகிவிட்டது.

சாருமஜூம்தார் 1972ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சில நாட்களிலேயே போலீÞ காவலில் இறந்துவிட்டார். மற்றொரு தலைவரான ஜங்கால் சந்தால் பல ஆண்டுகள் சிறையில் இருந்து, விடுதலையாகி மனமுடைந்து இறந்துபோனார். நக்சலைட் இயக்கத்தின் தத்துவ ஆசானாய் திகழ்ந்த கனுசன்யாலும் மனம் உடைந்துபோனார். படுகொலை அரசியலுக்குத் தலைமையேற்ற அவர், சீனாவின் ஆதரவைக் கோரினார். ஆனால் பலனளிக்கவில்லை. பிற்காலத்தில் தனது நக்சலைட் பாதை தவறானது என்று ஒத்துக்கொண்டார். ஆனால் விவசாயிகள் வீரியமாய் போராடாமல் நிலப்பிரபுத்து வத்தை ஒழிக்க முடியாது என்று கூறிவந்தார்.

சன்யால் 1977-ஆம் ஆண்டு பரபரப்பாய் பேசப்பட்ட பார்வதிபுரம் சதிவழக்கில் கைது செய்யப்பட்டு விசாகப்பட்டினம் சிறையிலடைக்கப்பட்டார். தொடர்ந்து, அவர் ஆயுதமேந்திய புரட்சியை அடியோடு கைவிடுவதாக அறிவித்தார். அதே ஆண்டில் பிரபல நக்சலைட் தலைவர்களாக இருந்த வினோத் மிÞரா, சுப்ரத்தத்தா, நாகபூஷன் பட்னாயக் ஆகியோர் சேர்ந்து புதியதோர் மார்க்சிÞட் லெனினிÞட் கட்சியைத்துவக்கினர். இவர்கள் நாடாளுமன்ற அரசியல் பாதைக்குத் திரும்புவதாக அறிவித்தனர். அதேசமயம் ஆயுதமேந்திய போராட்டங்களுக்கும் தங்கள் ஆதரவு உண்டு என்றும் கூறினர். தொடர்ந்து நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களிலும் போட்டியிட்டனர். ஆந்திர நக்சலைட்டுகள் இவர்களுடன் சேர மறுத்துவிட்டனர்.

1980களில் ஆந்திராவில் கொண்டபள்ளி சீத்தாராமையா தலைமையில் கொரில்லாக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. ஆயுதப்புரட்சியில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த அவர், தனது அமைப்புக்கு மக்கள் யுத்தக்குழு என்று பெயரிட்டார். அதேகாலத்தில் ஆந்திராவில் நக்சலைட் இயக்கத்தின் முக்கியத்தலைவராய் இருந்த நாகிரெட்டி மனமுடைந்து தோழர் பி.சுந்தரய்யா அவர்களைச் சந்தித்துப்பேசினார்.பயங்கர வாத வழியில் சென்று நூற்றுக்கணக்கான இளம் தோழர்களைப் போலிசின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலிகொடுத்து விட்டேனே என்று நாகிரெட்டி அழுது புலம்பிய செய்தி உண்டு. அதைத்தொடர்ந்து சில மாதங்களில் அவரும் காலமாகி விட்டார்.

கொண்ட பள்ளி சீத்தாராமையாவின் மக்கள் யுத்தக்குழு நவீன ஆயுதங்களோடு சில பயங்கர செயலை சாதித்தனர். அதோடு மக்களின் வெறுப்பையும் சம்பாதித்தனர்.அதன் பிறகு புல்லாரெட்டி குழு, கணபதி குழு என்று சில குழுக்களாய் பிளவுபட்டது. இறுதியாக எல்லாக் குழுக்களும் 2004-ஆம் ஆண்டு ஆயுதங்களை பறிமாறிக் கொள்ள மாவோயிÞட் என்ற ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக்கொண்டனர். அரசியல் திட்டமற்ற இந்த இணைப்பு வட்டார அளவில் பயங்கர செயலில் ஈடுபடுவதால் மக்களிடமிருந்து தனிமைப்படுவதை தவிர்க்க இயலவில்லை. நக்சலைட்டுகள், விவசாயிகளின் புரட்சி என்றனர். மாவோயிÞட்டுகள் அதைக் கைகழுவிவிட்டு மலைமக்களின் உரிமை பாதுகாப்பு என்று சுருங்கி நிற்கின்றனர். பூர்ஷ்வா அரசிற்கு மலை வாழ் மக்களின் உரிமைகளை மறுக்க இந்த பயங்கர வாதம் நடைமுறையில் உதவி செய்யும் பரிதாப நிலையை பார்க்கிறோம்.

மாவோயிÞட்டுகளின் செயல்பாடு

கடந்த ஓராண்டு காலத்தில் இந்தியாவின் சில மத்திய மாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் மாவோயிÞட் டுகளின் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. மேற்கு வங்கத்தில் மார்க்சிÞட்டுத் தலைவர்களையும், ஊழியர்களையும் மாவோயிÞட்டுகள் நூற்றுக்கணக்கில் கொன்று குவித்தனர். ஜார்கண்ட், ஒரிசா மாநிலங்களிலும் சிபிஎம் தோழர்களைக் கொன்றனர். மேற்குவங்கத்தில் மார்க்சிÞட்டுகள் தலைமை யிலான இடதுசாரிகள் ஆட்சியை வீழ்த்த வேண்டுமென்று வெறியோடு அலையும் மம்தா பானர்ஜியின் கூலிப்படையாக, கொலைப் பட்டாளமாக மாவோயிÞட்டுகள் செயல்படு கிறார்கள்.

மாவோயிÞட்டுகள், மார்க்சிÞட்டுகள் மீது தாக்குதல் நடத்தியபோது ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை. அண்மையில் தாந்தேவாடாவில் 76 காவலர்கள் படுகொலை செய்யப்பட்ட பின்பு நாடு முழுவதும் மாவோயிÞட்டுகளுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பு அலை தற்போது கிளம்பியுள்ளது. நாடாளுமன்றத்திலும் அது அனைத்துக்கட்சிகளின் பெருங்குரலாக எழுந்துள்ளது. விவாதத்தில் மத்திய காங்கிரÞ கூட்டணியில் பாதிப்பேர் மாவோயிÞட் ஆதரவாளர்களாக உள்ளனர் என்ற குற்றச்சாட்டும் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப் பட்டது. ஏனெனில் அதற்கு முந்தைய தினம்தான் மம்தா பானர்ஜி டில்லியிலிருந்து மாவோயிÞட்டுகளுக்கு ஆதரவாக அறிக்கைவிட்டிருந்தார். அதுவே அனைத்து எதிர்க்கட்சிகளின் கோபத்தைக் கிளறிவிட்டது.

மாவோயிÞட்டுகளின் தளங்களாக இருப்பவை காடுகளும், மலைகளும் சூழ்ந்த வனப்பகுதிகள்தான். இந்தக்காடுகளில் இரும்பு, செம்பு முதலான கனிம வளங்கள் உள்ளன. மலைகளில் கிராபைட் முதல் கிரானைட் வரை கிடைக்கிறது. எனவே இந்த வளமான வனப்பகுதிகளைக் கைப்பற்ற பன்னாட்டு நிறுவனங்கள் மத்திய அரசைக் கைக்குள் போட்டுக்கொண்டு களமிறங்கி ஆக்கிரமிப்பு செய்கின்றன. பலநூறு ஆண்டுகளாய் வனங்களில் வாழும் மலை மக்களை வெளியேற்றுகிறார்கள். வனவாசிகளின் நிலங்களுக்கு பட்டா இல்லை என்று கூறி அரசு அதிகாரிகளும் துணை நிற்கிறார்கள். இந்த நிலையைப் பயன்படுத்தி தாங்கள் மலை மக்களைப் பாதுகாப்பதாகக் கூறி மாவோயிÞட்டுகள் நுழைகிறார்கள். பின்னர் பாசிஸ்ட் பாணியில் செயல்பட துணிகின்றனர்.

மாவோயிÞட்டுகள் காடுகளில் தங்கள் ‘அரசை’ நிறுவிக் கொள்கிறார்கள். அரசை அவர்களது படைகள் நிர்வகிக்கின்றன. முதலில் மலை மக்களை இதர பகுதி மக்களிடம் நெருங்க விடாதபடி துண்டித்து விடுகிறார்கள். மலைப்பகுதிக்கு நகரங்களிலிருந்து வரும் சாலைவசதிகளை அடியோடு அழித்து விடுகிறார்கள். ரோடுபோட, பாலம் கட்ட வரும் காண்ட்ராக்டர் களிடம் பணம் பெற்று பெயரளவுக்கான ரோடுகளைப் போட வைக்கிறார்கள். பின்பு ரோடுகளையும் பாலங்களையும் வெடிவைத்து அழித்து விடுகிறார்கள். மலை மக்களின் பிள்ளைகள் படித்துவிட்டால் தங்களை மதிக்கமாட்டார்கள் என்று கருதி, பள்ளிக்கூடங்களை முதலிலேயே குண்டுவைத்துத் தரைமட்டமாக்கிவிடுகிறார்கள். தந்தி, தொலைபேசி டவர்களையும் குண்டுவைத்துத் தகர்த்து விடுகிறார்கள். மின்சார வசதியும் வந்துவிடாமல் தடுத்துவிடுகிறார்கள். போக்குவரத்து, மின்சாரம், கல்வி, மருத்துவம், ரேசன்கடை என்று ஏதுமற்றவர் களாக மலை மக்களை ஆக்கிவிடுகிறார்கள். இதை எதிர்க்கிற ஆதிவாசிகளை மாவோயிÞட்டுகள் கொன்று குவிக்கிறார்கள். வீட்டுக்கு ஒருவரை தங்கள் படையில் கட்டாயப்படுத்தி துப்பாக்கி முனையில் சேர்த்துக் கொள்கிறார்கள். இது உலகின் எல்லா பயங்கரவாத இயக்கங்களும் பின்பற்றும் நடைமுறை யாகும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பொதுமக்களிடம் வரி வசூலிப்பது, வியாபாரிகளிடம் மிரட்டி மாமூல் வாங்குவது, காண்ட்ராக்டர்களிடம் பங்கு வாங்குவது, வர்க்க விரோதிகள் என்று காவல்துறை, அதிகாரிகளைக் கடத்திப்போய் சுட்டுக் கொல்வது, பயந்த அதிகாரிகளிடம் மாமூல் பெறுவது, சுரங்கம் மற்றும் ஆலை முதலாளிகளிடம் பெரும் தொகையை மிரட்டிப்பெறுவது, ஆதிவாசிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் போய்ச் சேரவிடாமல் தடுப்பது, நகர்ப்புற மக்களை மிரட்ட ரயில் தண்டவாளங்களையும் ரயில்பெட்டிகளையும் வெடிவைத்துத் தகர்ப்பது, எதிர்ப்பவர்களை உளவாளிகள் என்று கூறிச் சுட்டுக்கொல்வது போன்றவை மாவோயிÞட் அரசாங்கத்தின் முக்கியமான பணிகளாகும். மேலும் மலைப்பகுதிகளில் கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்களை சாகுபடி செய்து, அதை விற்பனை செய்து கோடிக் கணக்கில் பணம் ஈட்டுவதாகவும் நேரில் பார்த்த பத்திரிகை யாளர்கள் கூறியுள்ளனர். வெளிநாடுகளிலிருந்து பணமும் ஆயுதமும் பெறுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மக்களை ஜனநாயக புரட்சிக்காக தயார் செய்யும் மார்க்சிÞட் கட்சியை அழிப்பதற்காகவே வழங்கப்படுகிறது என்பது வெளிப்படை .

மாவோயிÞட்டுகள் தங்கள் வசமுள்ள பகுதிகளில் 8 முதல் 10 வயதுள்ள ஆண், பெண் குழந்தைகளை கட்டாயப்படுத்தி அழைத்துப் போய் ஆயுத, ராணுவப் பயிற்சியளிக்கிறார்கள். இதை அனுமதிக்க மறுக்கும் பெற்றோருக்கு எமலோகச் சீட்டு வழங்கப்படும். ஏழ்மையிலும், வறுமையிலும் வாடும் மக்களுக்கு அரசாங்கத்தின் மீது கோபம் உள்ளது. எனவே அந்த அரசை வீழ்த்தி நமது அரசைக் கொண்டுவருமாறு அழைப்பு விடுக்கிறார்கள். தற்போது மாவோயிÞட் படைகளில் ஆங்காங்கு 14 ஆயிரம் ஆண்களும், 6000 பெண்களும், சுமார் 50 ஆயிரம் ஆதரவாளர்களும் 8 மாநிலங்களில் இருப்பதாக உளவுத்துறை கூறியுள்ளது. இது ஒரு தலைமையின் கீழ் செயல்படும் படையல்ல.

சீனாவின் ஒரிஜினல் மாவோ 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு செஞ்சேனையின் நீண்ட நடைபயணத்தை நடத்தி வெற்றி கண்டவர். செம்படை செல்லும் வழியில் பொதுமக்களிடம் படைவீரர்கள் நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்கு முறைகளை வகுத்து உத்தரவிட்டிருந்தார்.

  1. விடுதலைப்படை தங்குமிடங்களில் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் தரக்கூடாது. வீடுகளுக்குள் நுழையக் கூடாது. குடிநீர்கூட கேட்டுத்தான் பெற வேண்டும். உணவோ வேறு எந்த உதவியோ கேட்கக்கூடாது.
  2. வீடுகளின் வெளியே வாசல்களில்தான் படுத்துத் தூங்கவேண்டும். வைக்கோலைக் கேட்டு வாங்கி அதை விரித்துப்படுக்க வேண்டும். அல்லது மூங்கில் பாயை வாங்கிப் படுக்க வேண்டும். காலையில் அவைகளை எடுத்து இருந்த இடத்தில் வைக்க வேண்டும். நாம் வந்துபோன சுவடே இருக்கக்கூடாது.

ஆனால் தங்களை மாவோயிÞட் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் பொதுமக்களுக்கு அளப்பரிய துன்பங்களைத் தருகிறவர்கள். இவர்களது ஒடுக்குமுறைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் சத்தீÞகர் மாநிலத்தில் மட்டும் 60 ஆயிரம் பேர் அவர்களது  பிடியிலிருந்த மலைக்கிராமங்களை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். அந்த மக்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். சாகுபடியில் இந்தப் பயிர்தான் செய்ய வேண்டும், இன்ன விலைக்குத்தான் விற்க வேண்டும் என்றும் கட்டுப்படுத்துகிறார்கள். அரசின் உதவிகள் கிடைத்துப் பொருளாதார வளர்ச்சி, கல்வி முன்னேற்றம் ஏற்பட்டால் மக்களுக்கு அரசின் மீதுள்ள கோபம் மழுங்கிவிடும் என்று அரசு உதவிகளைப் பெற முடியாதபடி மக்கள் தடுக்கப்படுகிறார்கள். இந்தக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்படுகிறது. மிரட்டல், கடத்தல், கொள்ளை ஆகிய வழிகளில் பணம் திரட்டுகின்றனர்.

‘கொலைவெறித் தாக்குதல் நடத்திவரும் மாவோயிÞ ட்டுகளை ஆதரித்து அருந்ததிராய், மேதாபட்கர் போன்றவர்கள் பேசியும் எழுதியும் மக்களைக் குழப்ப முயற்சிக்கிறார்கள். குட்டிபூர்ஷ்வா வர்க்கத்தில் பிறந்தவர்களும், சந்தர்ப்ப வசத்தால் குட்டி பூர்ஷ்வாவாக ஆனவர்களும் அரசியலில் ஆயுதம் தான் தீர்மானிக்கிற சக்தி, மக்கள் வெறும் களிமண் என்று பயங்கர வாதத்தை பூசிப்பவர்களாக ஆகி விடுகிறார்கள். அந்த வகையில் இவர்களும் பயங்கரவாதத்தை பூசிக்கிறார்கள். அல்கொய்தா வானாலும், ஆர்.எஸ்.எஸ், ஆனாலும், மாவோயிஸ்டு ஆனாலும், குட்டி பூர்ஷ்வா படித்த மூளையே பயங்கர வாத தத்துவங் களையும் மேலை நாட்டு அனார்க்கிசம் என்ற அராஜக வாதத்தையும் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஆகும் என்பதை மார்க்சிஸ்ட்டுகள் மறந்து விடலகாது. வெகுஜன இயக்கங்களை கட்டுவதின் மூலமே குட்டி பூர்ஷ்வாக்களை சரியான வழியில் சிந்திக்க வைக்கமுடியும் என்பதையும் நாம் மறந்து விடலாகாது.

கருத்துக்கள் இல்லை

Please start yout discussion here ...