பசுமையான புதிய ஒப்பந்தம்

933
0
SHARE

 

 

உலகளவில் முதலாளித்துவம் மிகப்பெரிய அளவில் சரிவுகளை சந்தித்து வருகிறது. உலக வங்கி, சர்வதேச நீதி அமைப்புகள், அமெரிக் காவின் பொருளாதார அமைப்புகள் கடுமை யான பொருளாதார முயற்சிகளை மேற் கொண்டும் நிலைமை கட்டுப்படுத்த அல்லது சரிவுகளை சீர் செய்ய முடியவில்லை. கடுமை யான நிதிநிலை மானிய வெட்டுகள், நலத் திட் டங்கள் குறைப்பு, பொதுத்துறை நிறுவன விற் பனை, நிதி நிறுவனங்களில் புதிய முதலீடுகளுக்கு அனுமதி போன்ற முதலாளித்துவ பொரு ளாதார நடவடிக்கைகள் மேலும் சரிவுகளை அதிகரிக்கச் செய்கிறது. மேற்கத்திய நாடுகளை அதிகளவில் தாக்கிய பொருளாதார நிகழ்வுகள் மறைமுகமாகவும், நேரடியாகவும் நமது நாட் டையும் பாதித்து வருகிறது. உலக சந்தையின் தாக் கத்தை இந்தியாவும் சந்திக்க வேண்டிவரும் என்ற பொருளாதார நிபுணர்களின் கருத்துக்களில் இடதுசாரிகளின் வழிகாட்டலில் அல்லது நிர்பந்தம் காரணமாக மேற்கொள்ளப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் காரணமாகவே இன்றைய நமது நாட்டின் பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது பற்றி குறிப்பிடாமல் மேலும் வீழ்ச்சியை பெருக செய்யும் புதிய பொரு ளாதார முயற்சிகளுக்கு அதிக அளவு முக்கியத் துவம் தரப்படுகிறது. தற்போதைய நடைமுறை சூழலில் இரண்டாம் உலகப்போர் முடிந்து ஒரு மிகப் பெரிய அளவிலான பொருளாதார சரிவு கள் முதலாளித்துவ நாடுகளை தாக்கியபோது புதிய ஒப்பந்தம் என்ற பெயரில் மேற்கொள்ளப் பட்ட பொருளாதார நடவடிக்கைகள் ஒரு மீட்சியை தந்தது ஒரு மறுக்க முடியாத உண்மை. இன்றைய நடைமுறை சூழலில் நமது நாட்டிலும் புதிய பொருளாதார நடவடிக்கையாக சில பொருளாதார நிபுணர்கள் பசுமையான புதிய ஒப்பந்தம் என்ற பொருளாதார சிந்தனை கருத் தாக்கத்தை உருவாக்கி வருகின்றனர். குறிப்பாக நமது பொருளாதார வளர்ச்சி குறைந்துவரும் சூழலில் நாட்டின் மொத்த உற்பத்தி மிகப்பெரிய அளவில் சரிந்துவரும் நிலையில், பணவீக்கம் ஒரு பெரிய சுமையாக உயர்ந்துவரும் நடைமுறையில், நமது நாட்டின் பணமதிப்பு சர்வதேச சந்தையில் டாலருக்கு எதிராக 20 சதவீதம் வரை வீழ்ச்சி யைக் கண்டு வரும் நடைமுறையில். மும்பை பங்கு சந்தை வர்த்தகம் வருட அளவில் 27 சதவீதம் வரை முதலீடு இழப்புகளை சந்தித்து வரும் சூழலில் புதிய வரலாற்று சிறப்பைக் கொண்ட பொருளாதார பெயர்கள் சூட்டப்படும் பொரு ளாதார முயற்சிகள் அதிகளவு விளம்பரம் மற்றும் முக்கியத்துவம் பெறுகிறது.

தற்போதைய மத்திய அரசு மிக அதிக வட்டி யில் (9 சதவீதம்) கடன் வாங்கிவரும் நடைமுறை சூழலில் பெரிய நிறுவனங்கள் 13 சதவீதம் என்ற அளவில் கடன் வாங்கி தொழில் நடத்தி வரும் சூழலில் நமது நாட்டில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் கணிசமான அளவில் குறைந்து வரும் நிலையில் மத்திய அரசு செயற்கையாக நிலை மையை சமாளிக்க வெளிநாட்டு முதலீட்டா ளர்களிடம் இந்தியா சந்தையில் நேரடியாக முதலீடுகள் செய்ய அனுமதி வழங்கி வருகிறது. மேலும் பொதுத்துறை மற்றும் தனியார் பெரு நிறுவனங்களை 50,000 கோடிகள் வரை கட்ட மைப்பு கடன் பத்திரங்களில் முதலீடுகள் செய் யவும் பொருளாதார முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இத்தகைய நடைமுறை சூழலில் சூசன் ஜார்ஜ் அவர்களின் புதிய புத்தக மான “யாருடைய பிரச்சனை, யாருடைய எதிர் காலம்” முன் வைக்கப்பட்ட புதிய பசுமையான புதிய ஒப்பந்தம் என்ற பொருளாதார சிந்தனை, கோட்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. பொது மக்களின் நடைமுறைத் தேவைகளை உள்ள டக்கிய இப்பொருளாதார சிந்தனை மக்களின் அடிப்படைத் தேவைகள், உரிமை களைப் பெற் றுத்தர முயற்சிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. பாதுகாப்பான குடிநீர், உறைவிடம், 12 வய துடைய அனைவருக்கும் கல்வி, சுகாதாரம், மின்சார வசதிகள், நவீன எரிபொருள் வசதி போன்ற வற்றை நிறைவு செயயும் பொருளாதார மீட்சி நடவடிக்கையாக காணப்பயிலும் உண்மை யில் தற்போதைய பொருளாதார மற்றும் நிலப் பிரபுத்துவ கட்டமைப்பை பாதுகாக்கவே பெரி தும் முயற்சி செய்கிறது. குறிப்பாக இடதுசாரி இயக் கங்கள் முன்வைக்கும் நில சீர்திருத்தத்திற்கு மாற்றாக கூட்டுறவு விவசாயத்தை முன்வைக் கிறது. கடந்த பல வருடங்களாக இந்திய வேளாண்துறை மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி களை சந்தித்து வரும் நடைமுறை சூழலில், சிறு மற்றும் குறு விவசாயிகள், நடுத்தர விவசாயிகள் தங்கள் நிலங்களை இழந்து விவசாயக் கூலித் தொழிலாளர்களாக உருவாகி வரும் நடைமுறை சூழலில் நிலத்தில் பாடுபடும் தொழிலாளர் வர்க்கத்திற்கு நிலவுரிமையை மீட்டு தராமல் கூட்டுறவு வேளாண்மை என்ற போர்வையில் முதலாளித்துவ முயற்சிகள் தொடர்கிறது. உணவு பாதுகாப்பு முதல் தற்போதைய பல மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களை  மாற்றி வடிவமைத்து செயல்படுத்துவதன் வாயிலாக தற்போதைய பல வாழ்வுரிமை பிரச்சனைகளுக்கு தீர்வுகள் காணப்படும் முயற்சிகளை மேலும் முடக்கி தற்போதைய பொருளாதார சவால் களை புதிய வாய்ப்புகளாகக் கொண்டு மீட்பு நடவடிக்கைகள் என்ற போர்வையில் மேலும் பல கோடி விவசாயிகளின் நிலங்களை பயன்படுத்தி தங்களின் பொருளாதாரத்தை மென்மேலும் உயர்த்திக்கொள்ளவும் மாற்று வேளாண் மற்றும் பொருளாதார முயற்சிகள் என்ற பெயரில் இடது சாரி இயக்கங்களின் வேளாண் கோரிக்கைகளை, குரல்களை நெரிக்கும் முயற்சியாகவே கருத வேண்டியுள்ளது. ஆடு நனைகிறது என்று ஓநாய் கவலைப்படுவது போல் நமது நாட்டின் ஏழை, எளிய மக்களின் தேவையை நிறைவு செய்கிறோம் என்கிற, “மனித நேயத்துடன் கூடிய பொருளா தார முயற்சிகள்” நிலச்சீர்திருத்தம் நடைமுறைப் படுத்தாத வரையில் சாத்தியம் இல்லை என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

முனைவர் தி. ராஜ்பிரவின்

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்