மெக்சிகோ வளைகுடா விபத்து அவிழ்ந்திடும் புதிர்கள்!

682
0
SHARE

 

மாதம் ஐந்து உருண்டு ஓடினாலும் இன்னும் பல வருட பாதிப்பு அது. மெக்சிகோ வளைகுடாப் பகுதியில் (அமெரிக்க லுசியானா கடற்பகுதியும், மெக்சிக்கோ கியூபா கடல் எல்லைகளும் கூடும் இடம்.). லண்டனை தலைமையிடமாகக் கொண்ட பிரிட்டிஷ் பெட்ரொலிய நிறுவனத்தின் (க்ஷஞ) எண்ணெய்க் கிணற்றில் ஏற்பட்ட விபத்து அது. கடல் மட்டத்திற்குக் கீழ் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் துளையிட்டு பெட்ரொலியம் எடுத்திட அழுத்திய போது ஏற்பட்ட வெப்பத்தால் குழாய் வெடித்து சிதறி மேற்பரப்பில் பணி செய்து கொண்டிருந்த 11 தொழிலாளர்கள் உடல் கருகி சாம்பலாகினர் எனில் விபத்தின் தன்மையை உணர முடியும். கடற் தரையில் இருந்து எரிமலை போல் பொங்கி வெடித்து சிதறியதாய் நிகழ்ந்த விபத்தின் விளைவுகள் லேசானது அல்ல.

கச்சா எண்ணெய் எடுக்கும்போது வெளியேறும் எரிவாயு, விபத்தினால் ஏற்பட்ட தீ மூலம் மேலும் பரவி மீத்தேன் வாயு படலம் படிந்தும் சுமார் ஏழரை லட்சம் சதுர மைல்கள் பெட்ரோலியக் கச்சா கூழ் பரவி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது தற்காலிகமாக எண்ணெய்க் கிணறு மூடப்பட்டு பெட்ரொலிய கச்சா பரவுவது தடுக்கப்பட்டுள்ளது.

நடந்ததும் நடப்பதும் என்ன?

மிகப்பெரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை, கடல் வாழ் உயிரினங்கள், அரியவகை பறவைகள், தாவரங்கள் அழிந்து போயிருக்கிறது. கடற் தரையில் படர்ந்திருக்கிற பெட்ரோலியக் கச்சா கூழ் அமெரிக்க நியூ ஜெர்சி நகரத்தின் பரப்பளவு ஆகும்.

ஆழ்கடல் தரையில் துளையிட்டு பெட்ரோலியம் எடுத்திடும் குழாய் தென்கொரியாவில் 2001-இல் வடிவமைக்கபட்டு 2009 செப்டம்பரில் பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம் 2013 வரை குத்தகைக்கு எடுத்துள்ளது. 2009 செப்டம்பரில் மெக்சிகோ வளைகுடாவில் 1259 மீட்டர் ஆழத்தில் பொருத்தப்பட்ட இக்குழாய் உலகின் மிக ஆழமான பெட்ரோலியக் கிணறாகும். இக்குழாய் சரிவர பாதுகாப்புடன் இயங்குவதற்கு 21 மையப்படுத் தப்பட்ட ஊக்கிகள் தேவை. அவ்வாறு இருந்தால்தான் பெட்ரோல் எடுக்கும்போது ஏற்படும் அழுத்தம் காரணமாக வெப்பம் அதிகமாகாமல் இருக்கும். ஆனால் பிரிட்டிஷ் பெட்ரோலியம் கூடுதல் செலவைக் கணக்கிட்டு ஆறு ஊக்கிகள் மட்டுமே பொருத்தி விபத்துக்கு வழிவகுத்து விட்டது. பொறியியல் விஞ்ஞானத்தின் (நுபேiநேநசiபே ளுஉநைnஉந) புதிய எல்லைகள் தொடப்படும் இன்றைய சூழலில் க்ஷஞ கம்பெனியின் மெத்தனம் லாபவெறி உச்சத்தில் மூலதனம் கட்டுக்கடங்காமல் அலைவதையே அம்பலமாக்குகிறது.

விபத்தால் ஏற்பட்ட பேரழிவு போதாதென தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் க்ஷஞ கம்பெனி மேலும் அட்லாண்டிக் பெருங்கடலை நாசம் செய்கிறது. காரெக்சிட் என்கிற ரசாயனத்தை பயன்படுத்தி கடற்தரையை சுத்தம் செய்வதாக 6 லட்சம் லிட்டர் ரசாயனத்தை கொட்டியதால் வேறு மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அந்த ரசாயனத்தோடு பணியில் இறக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவருமே மூச்சுத் திணறல், வாந்தி பேதி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலை உண்டானது.

புவியியல் நிபுணர்கள் கூறுவது யாதெனில் காரெக்சிட் ரசாயனம் மனிதர்களுக்கு நுரையீரல், குடல் மற்றும் தோல் வியாதிகளை உண்டாக்கும் என்பதே! வரும் காலங்களில் ஏற்படும் புயல், சூறாவளி இவற்றால் கடல் பொங்கும் போது நச்சு ரசாயனம் குடியிருப்பு பகுதிகளுக்கு நுழைந்து குடிநீர் உள்ளிட்டதோடு கலப்பதற்கும் வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர்.

கடல் மட்டத்திலிருந்து ஆறு கிலோ மீட்டர் ஆழத்திற்கு சென்றிடும் நீர் மூழ்கி கப்பல்களை வடிவமைத்ததற்காக உயரிய லெனின் விருது பெற்ற ரஷ்ய விஞ்ஞானி டாக்டர் சகலெவிச், சுற்றுச்சூழல் பேரழிவு பற்றிய நமது எல்லா புரிதலுக்கும் அப்பாற்பட்டது மெக்சிகோ வளைகுடா விபத்து என்கிறார்

என்ன செய்தால் இந்நிலைமையை கட்டுப்படுத்தலாம் எனும் கேள்வி எழும்போது ரஷ்ய நிபுணர்கள் சொல்வது விபத்து நிகழ்ந்த பெட்ரோல் கிணறு மீது அணு வெடிப்பை நிகழ்த்தினால் அந்தப் பகுதியோடு சேதம் நின்றுபோகும் என்பதே! ஆனால் க்ஷஞ நிறுவனம் இதற்கு தயாரில்லை. ஏனெனில் அவ்வாறு செய்தால் அங்கு மீண்டும் பெட்ரோல் எடுக்க இயலாது. மேற்சொன்னவை யாவும் ஒருபுறமிருக்க இதன்பின் உள்ள அரசியலை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்க புவியியலாளர்கள் க்ரிஸ் லான்டவ், டெர்ரன்ஸ் எயிம் இருவரும் மெக்சிகோ வளைகுடா விபத்தை அமெரிக்க, பிரிட்டிஷ் அரசுகள் மறைப்பதாகவும் செய்தி சேகரிக்க முயல்வோரை உளவுத்துறையினர் மூலம் மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர்.

எதை மறைக்க எது? யாரை காப்பாற்ற யார்?

லண்டன் செயிண்ட் ஜேம்ஸ் சதுக்கத்தில் தலைமையிடம் கொண்டுள்ள க்ஷஞ கம்பெனி 1998 அமெரிக்காவில் நான்காவது பெரிய எண்ணெய்க் கம்பெனியான அமாக்கோவோடு (ஹஅடிஉடி) இணைத்துக் கொண்டதன் மூலம் 39 சதவிகித அமெரிக்க பங்குகளை பெற்றது. ஏற்கனவே இருக்கும் 40 சதவிகித பிரிட்டிஷ் பங்குகளோடு ஸ்வீடன், டென்மார்க் பங்குகளும் உள்ளன.  க்ஷஞ கம்பெனியின் 13 இயக்குனர்களின் ஐந்துபேர் பிரிட்டிஷார், நான்குபேர் அமெரிக்கர், இரண்டுபேர் இரண்டு நாட்டிலும் குடியுரிமை பெற்றவர்கள், ஒருவர் ஸ்வீடன், ஒருவர் டென்மார்க். பிரிட்டிஷ் இயக்குனர்கள் நான்கு பேர் விக்டோரியா ராணி விருது பெற்றவர்கள் (நம் ஊரில் டாடா பிர்லா வகையறாக் களுக்கு பத்மபூஷன் தருவது மாதிரி!). பிரிட்டிஷ் அமெரிக்க அரசுகளின் அதிகார மையமாக இருப்பவர்கள் க்ஷஞ கம்பெனி இயக்குனர்கள். ஏனெனில் பல பன்னாட்டு கம்பெனிகளின் தலைமையில் இருப்பவர்கள் இவர்கள். மூலதனத்தின் அடிப்படை சூட்சுமமே இதுதான்.

உதாரணத்திற்கு டக்ளஸ் ஃப்ளிண்ட் என்ற இயக்குனர் ஹாங்காங் – ஷாங்காய் வங்கியின் (ழளுக்ஷஊ) தலைமை நிதியதிகாரியாக இருப்பவர். பல அமெரிக்க நிறுவனங்களின் பொறுப்பிலே இருந்தவர். இன்னொரு க்ஷஞ இயக்குனர் லெப்டினென்ட் வில்லியம் காஸ்டில் ஜெனெரல் எலெக்ட்ரிக் கம்பெனியில் (ழுநுஊ) இயக்குனராக உள்ளவர். நமது நாட்டில் கூட தனித்தனியாக கம்பெனிகள் பொருட்களை உற்பத்தி செய்து சந்தைக்கு விடுவர். வணிகப்போட்டி நடக்கும். ஆனால் யார் முந்தினாலும் லாபம் இரண்டு கம்பெனி முதலாளிகளுக்கும் போகும்.

உதாரணம் ரிலையன்ஸ் நிறுவனம் விமல் என்ற பெயரில் கோட்சூட் துணிகளை விற்கிறது. பிரதான போட்டி கம்பெனி பாம்பே டையிங் என வைத்துக்கொண்டால் லாபம் இரண்டு கம்பெனி முதலாளிக்கும் போய்ச்சேரும். பாம்பே டையிங் முதலாளி நூஸ்லிவாடியா ரிலையன்ஸ் கம்பெனி இயக்குனர் களில் ஒருவர். அம்பானி குடும்ப உறுப்பினர் ஒருவர் பாம்பே டையிங் இயக்குனர் குழுவில் இருக்கிறார். இன்னொரு உதாரணம் சொல்லப்போனால் டாடா குடும்பத்தின் இயக்கு னர்களில் நூஸ்லிவாடியா, முகேஷ் அம்பானி போன்றோர் உள்ளனர். மேற்சொன்ன காட்சியின் மிகப்பெரும் பிம்பமே பன்னாட்டு பகாசுர கம்பெனிகளின் மூலதன சுழற்சியின் சூறாவளிப் போன்ற அதன் தாக்கமும்!

மெக்சிகோ வளைகுடா விபத்தில் 90 ஆயிரம் கோடி நட்ட ஈடாக நிறுவனம் கொடுத்த பிறகும் ஒபாமா அரசு க்ஷஞ கம்பெனி மீது பாய்ச்சல் காட்டுகிறது. பிரிட்டனிலோ அமெரிக்காவை விமர்சித்து குரல்கள் எழும்புகின்றன. ஆவேசத்தோடு நடக்கும் காட்சிகளின் பின்னணியில் இருப்பது அமெரிக்க, பிரிட்டிஷ் மூலதன சக்திகளே! பென்சன் திட்டத்திற்காக முதலீடு செய்யப்பட்ட சாதாரண மக்களின் சேமிப்பு க்ஷஞ கம்பெனி பங்குகளாய் உள்ளதால் சூதாட்டம் மிகுந்த பங்குச்சந்தைச் சுழலில் சிக்கித் தவிக்கிறது எளிய மக்களின் எதிர்கால பென்சன்! நடந்த விபத்துக்கு நட்ட ஈடு அதிகமானால் பென்ஷன் நிதிக்கான ஈவு அரோகரா என க்ஷஞ கம்பெனி சைகை காட்ட, நட்ட ஈடு குறைந்தால் நடப்பதே வேறு என அமெரிக்க பங்குகள் பூச்சி காட்ட, விறுவிறுப்பாக செல்கிறது காட்சிகள்.

பன்னாட்டு நிதி மூலதன சூறாவளி சுழற்சியும், அரசியல் இராணுவக் கூட்டுடன் உலகம் முழுவதும் உள்ள இயற்கை வளங்களை தங்கள் வசம் வைத்துக் கொள்கிற அம்சம்தான் இன்றைய ஏகாதிபத்திய அரசியலின் அடிப்படை. இந்த அடிப்படையில் நடைபெறும் காட்சிகளே இராக், ஆப்கன் ஆக்கிரமிப்புகள், எரிவாயுக்காக இரான் மீது கஜகஸ்தான் மீது அடுத்தடுத்த குறிகள். சவுதியில், பல ஆப்பிரிக்க நாடுகளில் பொம்மை அரசுகள் என தொடர்கிறது அமெரிக்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தியங்களின் மேலாண்மைக்கான அரசியல்.  இன்றைய உலகில் பிரிட்டனுக்கு அடுத்து தென்கெரியாவும். சவூதி அரேபியாவும் தான் அமெரிக்காவின் இளைய பங்காளியாக உள்ளது,

1995-லிருந்து இந்தியாவை மேற்சொன்ன சூழலில் அமெரிக்கா விற்கு இளைய பங்காளியாக நமது முதலாளிகள் ஆக வாய்ப்புக்கள் கூடும். ஆனால் நமது இயற்கை வளம் அவர்கள் வசம் போய்விடும் இத்தகைய நிலையை அடையத் துடிக்கும் மன்மோகன் – சிதம்பரம் வகையறாக்களின் முயற்சி! அதுவே அணுவிசை விபத்து மசோதாக்களில் பிரதிபலிக்கிறது,

நமது தோளில் உள்ள நாணின் இலக்கு எதுவாக வேண்டும் எனப் புரிந்திடும் இப்போது….

 

–சு. லெனின் சுந்தர்

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்