ஃபிடல் காஸ்ரோ – மேற்கோள்கள் …

7086
0
SHARE
  1. நான் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தை படித்துத்தான் கம்யூனிஸ்ட் ஆனேன். முதலாளித்துவப் பொருளாதார அமைப்பின் பிரச்சனைகள் குறித்துப் புரிந்துகொண்டபோது, அது அபத்தமாகவும், கண்மூடித்தனமானதாகவும், மனிதநேயமற்றதாகவும் எனக்குத் தெரிந்தது. நான் எனக்குத் தெரிந்தவகையில் உற்பத்தி விநியோகம் ஆகியவற்றுக்கான முறைகளை விளக்கத் துவங்கினேன்.
  2. அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் சரி, உலகத்தில் வேறு எங்கும் சரி முதலாளித்துவம் பயன்தரவில்லை என்பதை உலகமே அறியும்; ஒரு நெருக்கடியிலிருந்து அடுத்த நெருக்கடி என்று ஒவ்வொரு முறையும் அது மேலும் மேலும் மோசமான நெருக்கடிகளின் ஊடாகத்தான் தடுமாறிச் சென்றுகொண்டு இருக்கிறது.
  3. அவர்கள் சோசலிசத்தின் தோல்வி பற்றி பேசுகின்றனர். முதலாளித்துவத்தின் வெற்றி எங்கே உள்ளது? ஆப்பிரிக்காவில், ஆசியாவில், லத்தீன் அமெரிக்காவில் முதலாளித்துவத்தின் வெற்றி எங்கே உள்ளது?
  4. முதலாளித்துவம் குமட்டல் ஏற்படுத்துவதாக, நாற்றம் எடுப்பதாக, சீரற்றதாக, அந்நியப்படுத்துவதாக இருக்கின்றது; ஏனென்றால், அது போர்களை, பொய்மையான தோற்றங்களை, போட்டிகளை உருவாக்குவதாக இருக்கின்றது என்பதையே நான் காண்கின்றேன்.
  5. ஒரு நாள் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் முதலாளித்துவம் இல்லாது ஒழியும். ஏனெனில், எந்தவித சமூக வர்க்கமும் நிலையானதல்ல; ஒரு நாள் வர்க்கப் பிரிவினை கொண்ட சமூகம் இல்லாமல் போகும்.
  6. வட அமெரிக்கர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளவில்லை. எங்கள் தேசம் கியூபா மட்டுமல்ல; மானுட குலம் முழுமையுமே எங்கள் தேசம்தான்.
  7. மனிதர்கள் வரலாற்றை உருவாக்குவதில்லை; வரலாறுதான் தனது தருணத்திற்கான மனிதர்களை உருவாக்குகின்றது.
  8. நான் ஒரு மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்; எனது வாழ்வின் கடைசி நாள்வரை நான் ஒரு மார்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஆகத்தான் இருப்பேன்.
  9. புரட்சி என்பது சுரண்டுபவர்களுக்கு எதிரான சுரண்டப்படுபவர்களின் சர்வாதிகாரம்.

 

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்