நமது இயக்கத்தின் அவசர அவசியப் பணிகள்

543
0
SHARE

-லெனின்

இன்றும் வழி காட்டும் லெனினது எழுத்துக்கள்

(லெனினது பல எழுத்துக்கள் காலத்தை வென்று நிற்பவைகள். அதில் ஒன்று, 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ரகசிய இதழாக வெளிநாட்டில் அச்சடிக்கப்பட்டு ரஷ்யாவிற்குள் கடத்தப்பட்ட இஸ்க்ராவில் வெளிவந்த ,“நமது இயக்கத்தின் அவசிய அவசரப் பணிகள் ” என்ற கட்டுரை. இக் கட்டுரை  சமூக இயக்க இயல்புகளை விஞ்ஞான அடிப்படையில் பொதுவாக விளக்கி ரஷ்ய நிலைமைகளுக்கேற்ப  பொறுத்துகிறது.

லெனின் வாழ்ந்த காலம் எந்தக் கொடுமைகளையும் செய்து மூலதனத்தைத் திரட்டலாம் என்ற நியதி துப்பாக்கி முனைகளால் பாதுகாக்கப்பட்டு ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ஆட்சி செய்த காலம். சர்வதேச செலவாணியாக தங்கம், வெள்ளி இரண்டு மட்டுமே  இருந்த காலம். நாடுகளை அடிமைப்படுத்திட ஏகாதிபத்திய வாதிகள் சண்டைகள் போட்ட காலம்.

இன்று பல வகையான ஏமாற்றுக்கள்,சீட்டாட்ட விளையாட்டைப் போன்ற  நியதிகள். காலாட்டியே பணம் சம்பாதிக்கிற வழிகள்,  நாடாளுமன்ற சூழ்ச்சிகள் இவைகளின் மூலம்  மூலதனத் திரட்சிக்கு வேட்டை யாடும் உரிமை பேரழிவு ஆயுதப் படைகள் கொண்டு காக்கும் காலம். இப்படிக் கூறுவது சரிதானா என்று யாருக்காவது சந்தேகம் ஏற்பட்டால் அமெரிக்கக் பொருளாதார நிபுணர்களில் ஒருவரான ஜான் கால்பிரெயித் எழுதிய இன்னசன்ட் பிராட்ஸ் என்ற நூலைப்படிக்கவும்( தமிழில் அலைகள் பதிப்பகம் வெளியிட்டுள்ளது).

இந்தப் புதிய சூழலில் லெனினது இயக்க இயல் விளக்கங்கள்  நடைமுறைக்கு வழிகாட்டுமா என்ற சந்தேகம் எழும். 20ம் நூற்றாண்டு துவக்கத்தில் ஐன்ஸ்டினால் கண்டுபிடிக்கப்பட்ட சார்பு கோட்பாடு ஏவுகனை இயக்கத்தை கணக்கிட உதவுவது போல் லெனின் 1900ம் ஆண்டில் கண்ட சமூக இயக்கத்தைப் பற்றிய கோட்பாடுகள் இன்றும் வழி காட்டுகிறது.  வேறு மாதிரி சொல்வதனால் மார்க்ஸ் எழுதிய மூலதனம் என்ற நூல் முதலாளித்துவ உற்பத்திமுறையை உலகம் தாண்டுகிற வரை வழிகாட்டுவது போல் லெனினது கீழ்கண்ட எழுத்தும் வழி காட்டும் ஆற்றல் கொண்டது  எனலாம். இந்த கட்டுரையில் சமூக ஜனநாயக இயக்கத்தின் அதாவது கம்யூனிச இயக்கத்தின் சில பொதுக் கோட்பாடுகளையும், நடைமுறையை அளந்து பார்க்கும் அளவு கோல்களையும் லெனின் வரையறை செய்கிறார்.அதோடு அன்று ரஷ்யாவில் நிலவிய குறுக்குவழி கோட்பாடுகளையும், நடைமுறைகளையும் அலசுகிறார்.  கீழ்க்கண்டவற்றை ரஷ்ய புரட்சியாளர்களுக்கு உணர்த்தவே இக்கட்டுரையை எழுதுகிறார்.

(.அ) சமூக ஜனநாயக இயக்கம் என்பது அதாவது  கம்யூனிச இயக்கமென்பது தொழிலாளி வர்க்க இயக்கத்தோடு  சோசலிச இயக்கத்தை இணைப்பதே ஆகும்.(ஆ) சோசலிச இயக்கமும், தொழிலாளி வர்க்க இயக்கமும் தனிமைப்பட்டு ஒட்டும் உறவுமில்லாமல் போகும் பொழுது, இரண்டுமே பலமிழந்துவிடுகிறது.( இ) சோசலிசம், தொழிலாளி வர்க்க இயக்கம் இவை இரண்டின் இணைப்பும் ஒவ்வொறு நாட்டிலும், வரலாற்று வழியிலும், அந்தந்த நாட்டுக்குமுரிய தனி முறைகளில், காலம், இடம் ஆகிய நடப்புகளுக்கேற்பவே உருவாகும். (ஈ)ஒழுங்கமைப்பு  இல்லையேல் பாட்டாளி வர்க்கத்தால் ஒருபோதும் வர்க்க உணர்வு படைத்த போராட்டம் நடத்தும் நிலைக்கு உயர முடியாது.

ஊண்றிப் படித்தால்  நமது இயக்கத்தின் அவசிய அவசரப் பணிகள் என்று தலைப்பிட்ட இக் கட்டுரை 21 ம் நூற்றாண்டில் வாழும்  நமக்கும் வழிகாட்டுவது  மனதில்படும்.  பாட்டாளி வர்க்கம் மற்றும் அரசியல் பற்றி நாம் நமது ஆசைகளுக்கேற்ப உருவாக்கியிருக்கும் கருத்துக்கள், மற்றும் நம்பிக்கைகள் சரிதானா என்று உரசிப் பார்க்க  இக் கட்டுரையில் கூறப்பட்டவைகள் உதவும்-. குறிப்புகள் வி.எம்.எஸ்.)

எதேச்சாதிகாரத்தை வீழ்த்துவதே, அரசியல் சுதந்திரம் பெறுவதே ருஷ்யாவின் தொழிலாளி வர்க்கக் கட்சியினுடைய உடனடி அரசியல் பணி என்பதை ருஷ்ய சமூக-ஜனநாயகம் பன்முறை பறைசாற்றியிருக்கிறது. பதினைந்து ஆண்டு களுக்கு முன்பே ருஷ்ய சமூக-ஜனநாயகத்தின் பிரதிநிதிகளால், உழைப்பு விடுதலைக் குழுவின் உறுப்பினர்களால், இது தெளிவாய் எடுத்துரைக் கப்பட்டது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு 1898 வசந்தத்தில் ருஷ்யாவின் சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியை நிறுவிய ருஷ்ய சமூக-ஜனநாயக நிறுவனங்களது பிரதிநிதிகளால் இது வலியுறுத்தப்பட்டது.

இவ்வாறு மீண்டும் மீண்டும் பறைசாற்றப் பட்டிருப்பினுங்கூட ருஷ்யாவில் சமூக-ஜனநாய கத்தின் அரசியல் பணிகளைப் பற்றிய பிரச்சனை திரும்பவும் இப்பொழுது முன்னிலைக்கு வந்திருக் கிறது. இப்பிரச்சனைக்கு அளிக்கப்பட்ட மேற் கண்ட பதில் சரிதானா என்று நமது இயக்கத்தின் பிரதிநிதிகள் பலர் சந்தேகப்படுகின்றனர். பொரு ளாதாரப் போராட்டமே முதன்மையான முக்கியத்துவமுடையது என்பதாய்ப் பேசப்படு கிறது. பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் பணிகள் பின்னிலைக்குத் தள்ளப்பட்டும் வருகின்றன. சுயேச்சையான தொழிலாளி வர்க்கக் கட்சி ஒன்றை ருஷ்யாவில் அமைக்க வேண்டுமென்பது சொந்த சிந்தனையின்றி அயலார் பேச்சை அப்படியே திருப்பிச் சொல்வதே ஆகும். தொழிலாளர்கள் அரசியலை மிதவாதிகளுடன் கூட்டு கொண்ட அறிவுத்துறையினரிடம் விட்டு விட்டு பொருளாதாரப் போராட்டத்தை மட்டுமே நடத்திச் செல்ல வேண்டும் என்பதாய்க் கூடப் பேசப் படுகிறது. இந்தப் புதிய நெறியின் மிக அண்மைக் காலத்திய பிரகடனம் (அபக்கியாதி பெற்ற ஊசநனடி  ) ருஷ்யப் பாட்டாளி வர்க்கத்துக்கு இன்னும் வயது வந்தாகவில்லை என்ப தாய்ச் சாதித்து சமூக-ஜனநாயக வேலைத் திட்டத்தை அறவே நிராகரிக்கும் அளவுக்குச் செல்கிறது. ரபோச்சயா மீசில் பத்திரிகை (குறிப்பாய் அதனுடைய தனி அனுபந்தம்) அநேகமாய் இதே நிலையைத்தான் ஏற்கிறது. ருஷ்ய சமூக-ஜன நாயகம் ஊசலாட்டத்துக்கும் தன்னைத்தானே மறுப்பதற்கும் ஒப்பான சஞ்சலத்துக்குமுரிய ஒரு கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது.

ஒரு புறத்தில் தொழிலாளி வர்க்க இயக்கம் சோஷலிசத்திலிருந்து துண்டிக்கப்பட்டு வரு கிறது. தொழிலாளர்கள் பொருளா தாரப் போராட்டம் நடத்த உதவி செய்யப்படு கிறது. ஆனால் அனைத்து இயக்கத்துக்கும் உரித் தான சோஷலிச நோக்கங்களையும் அரசியல் பணி களையும் அவர்களுக்கு விளக்கிக் கூற எதுவும், அநேகமாய் எதுவும் செய்யப்பட வில்லை. மறுபுறத்தில் சோஷலிசமானது தொழிலாளர் இயக்கத்திடமிருந்து துண்டிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் தம்மைப் பொருளா தாரப் போராட்டத்துக்குள் இருத்திக் கொண்டு விடுகிறபடியால் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் முற்றிலும் அறிவுத்துறையின ராலேயே நடத்தப்பட்டாக வேண்டும் என்பதாய் ருஷ்ய சோஷலிஸ்டுகள் மேலும் மேலும் பேசத் திரும்பவும் முற்படுகிறார்கள்.

வருந்தத்தக்க இந்த நிலை தோன்ற, எங்கள் கருத்துப் படி, மூன்று சூழ்நிலைமைகள் காரண மாய் இருந்துள்ளன. முதலாவதாக, ருஷ்ய சமூக-ஜனநாயகவாதிகள் தமது செயற்பாட்டின் ஆரம்பக் காலத்தில் வெறும் பிரச்சாரக் குழுக் களது வேலைக்கு அப்பால் செல்லாமல் தம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டுவிட்டனர். வெகுஜனங் களிடையே நாம் கிளர்ச்சி நடத்த முற்பட்ட போது மற்றொரு கடைக்கோடி நிலைக்குப் போகாதபடி எப்பொழுதும் நம்மை நாம் கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை. இரண்டாவ தாக நமது செயற்பாட்டின் ஆரம்பக் காலத்தில் நரோத்னயா வோல்யா3 உறுப்பினர்களை எதிர்த்து  நமது வாழ்வின் உரிமைக்காக அடிக்கடி நாம் போராட வேண்டியிருந்தது. “அரசியலை” நரோத்னயா வோல்யா உறுப்பினர்கள் தொழி லாளி வர்க்க இயக்கத்திலிருந்து தனிமைப்பட்ட செயற்பாடாய்க் கருதினர். அரசியலை முற்றிலும் சதிச்செயல் போராட்டமாய்ச் சிறுமை செய் தனர். இவ்வகையான அரசியலை நிராகரிக்கை யில் சமூக ஜனநாயகவாதிகள் அரசியலையே முற்றிலும் பின்னிலைக்குத் தள்ளிவிடும் கடைக் கோடி நிலைக்குச் சென்றனர். மூன்றாவதாக, சிறு சிறு உள்ளூர்த் தொழிலாளர் குழுக்களில் தனிமைப்பட்டு செயல்பட்ட சமூக-ஜனநாயக வாதிகள், உள்ளூர் குழுக்கள் யாவற்றின் செயல் களையும் ஒன்றுபடுத்தவும் புரட்சிப் பணி சரி யான வழிகளில் நடைபெற ஏற்பாடு செய்யவும் கூடியதான புரட்சிகரக் கட்சி ஒன்றை அமைப்ப தன் அவசியத்தில் போதிய கவனம் செலுத்த வில்லை. தனிமைப்பட்ட செயற்பாட்டின் இந்த முதன்மை நிலை இயற்கையாகவே பொருளா தாரப் போராட்டத்தின் முதன்மை நிலையுடன் தொடர்புடையதே ஆகும்.

இந்த நிலைமைகளின் விளைவாய் இயக்கத் தின் ஒருபுறத்தில் மட்டும் கவனம் குவியலாயிற்று. “பொருளாதாரவாதப்” போக்கு (இதை ஒரு போக்கு என்பதாய்க் கூறலாமெனில்) இந்தக் குறுகலான தன்மையை ஒரு தனித் தத்துவத்தின் அந்தஸ்துக்குரியதாய் உயர்த்த முயன்றுள்ளது. இதன் பொருட்டு அது புதிய மோஸ்தராகியுள்ள பெர்ன்ஷ்டைனியத்தையும் “மார்க்சியத்தின் விமர்சனம்” என்பதாய்ச் சொல்லிப் பழைய முதலாளித்துவக் கருத்துக்களுக்குப் புதிய பெய ரிட்டு விளம்பரப்படுத்தும் மோஸ்தரையும் பயன் படுத்திக்கொள்ள முயற்சி செய்துள்ளது. இம் முயற்சிகள்தான் ருஷ்யத் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கும் அரசியல் சுதந்திரத்துக்குரிய போராட்டத்தின் முன்னணிப் படையான ருஷ்ய சமூக-ஜனநாயகத்துக்கும் இடையிலுள்ள இணைப்பு பலவீனமடைந்துவிடும் அபாயத்தை உண்டாக்கியுள்ளன. இந்த இணைப்பை பலப் படுத்துவதே நமது இயக்கத்தின் மிகவும் அவசர அவசியமான பணியாகும்.

தொழிலாளி வர்க்க இயக்கமும் சோஷ லிசமும் ஒன்று சேர்ந்ததுதான் சமூக-ஜனநாயகம் எனப்படுவது. சமூக-ஜனநாயகத்தின் பணி செய லின்றி சும்மாயிருந்து தொழிலாளி வர்க்க இயக் கத்தின் தனிப்பட்ட ஒவ்வொரு கட்டத்திலும் அதற்குச் சேவை ஆற்றுவதல்ல. இயக்கம் முழு வதன் நலன்களையும் பிரதிநிதித்துவப்படுத்து வதும், இந்த இயக்கத்துக்கு அதன் இறுதி நோக் கத்தையும் அதன் அரசியல் பணிகளையும் சுட்டிக்காட்டுவதும், அதன் அரசியல், சித்தாந்த சுயேச்சை நிலையைப் பாதுகாப்பதும்தான் சமூக-ஜனநாயகத்தின் பணி. சமூக-ஜனநாயகத்திட மிருந்து தனிமைப்படுத்தப்படுமாயின் தொழி லாளி வர்க்க இயக்கம் சிறுமையுற்றுவிடு கிறது. தவிர்க்க முடியாதபடி முதலாளித்துவத் தன்மைய தாகிவிடுகிறது. பொருளாதாரப் போராட் டத்தை மட்டும் நடத்திச் செல்வதன் மூலம் தொழிலாளி வர்க்கம்  தனது அரசியல் சுயேச்சை நிலையை இழந்துவிடுகிறது, பிற கட்சிகளுக்கு வால் பிடித்துச் சென்று, “தொழி லாளர்களுடைய விடுதலையைத் தொழிளாளர் களேதான் போராடிப் பெற்றுக் கொண்டாக வேண்டும்” என்னும் மாபெரும்  கோட்பாட் டுக்குத் துரோகமிழைக்கிறது. தொழிலாளி வர்க்க இயக்கம் சோஷலிசத்திலிருந்து விலகி நின்று இரண்டும் தனித் தனியே சொந்தப்பாதையிலே சென்ற காலகட்டம் ஒவ்வொரு நாட்டிலும் இருந்துள்ளது, சோஷலிசம், தொழிலாளி வர்க்க இயக்கம் இவை இரண்டையும் இந்தத் தனிமைப் பாடு ஒவ்வொரு நாட்டிலும் பலமிழக்கவே செய்துள்ளது. சோஷலிசமானது தொழிலாளி வர்க்க இயக்கத்துடன் இரண்டறக் கலக்கையில் மட்டும்தான் எல்லா நாடுகளிலும் இரண்டுக்கும் நிலையான அடித்தளம் அமைக்கப்படுகிறது. சோஷலிசம், தொழிலாளி வர்க்க இயக்கம் இவை இரண்டின் இந்த இணைவானது ஒவ் வொரு நாட்டிலும் வரலாற்று வழியில், அந்தந்த நாட்டுக்கும் உரிய தனி முறைகளில், காலம், இடம் ஆகிய நடப்பு நிலைமைகளுக்கு ஏற்ப உருவாயிற்று. ருஷ்யாவில் சோஷலிசத்தையும் தொழிலாளி வர்க்க இயக்கத்தையும் இணைத் திடுவதன் அவசியம் தத்துவார்த்தத்தில் நெடுங் காலத்துக்கு முன்பே பறைசாற்றப்பட்டிருந்த போதிலும், நடைமுறையில் இவ்விணைவு இப் பொழுதுதான் உருவாக்கப்பட்டு வருகிறது. இது மிகவும் கடினமான ஒரு நிகழ்ச்சிப்போக்கு. ஆகவே இது நடைபெறுகையில் ஊசலாட்டங் களும் ஐயப்பாடுகளும் ஏற்படுவதில் வியப்பு ஏதுமில்லை.

கடந்த காலத்திலிருந்து பெறக்கூடிய படிப்பினை என்ன?

எதேச்சாதிகார அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுவதும் அரசியல் சுதந்திரம் பெறு வதுமே மிகவும் அவசர அவசியப் பணியாகி விடும்படியான ஒரு நிலைமைக்கு ருஷ்ய சோஷலிசத்தின் வரலாறு அனைத்தும் இட்டுச் சென்றுள்ளது. நமது சோஷலிச இயக்கம் எதேச் சாதிகாரத்துக்கு எதிரான போராடட்டத்தில் முழு முனைப்புடன் ஈடுபட்டது. மறுபுறத்தில் ஏனைய நாடுகளைக் காட்டிலும் ருஷ்யாவில் சோஷலிச சிந்தனையானது உழைப்பாளி வர்க்கங்களிடமிருந்து பெருமளவுக்குத் தனிமைப் பட்டிருக்கிறது என்பதையும், இந்த நிலைமை நீடிக்குமாயின் ருஷ்யாவில் புரட்சி இயக்கம் நிச்சயம் திறனற்றதாகிவிடும் என்பதையும் வர லாறு தெளிவுபடுத்தியுள்ளது. ருஷ்ய சமூக-ஜன நாயகம் நிறைவேற்ற வேண்டியுள்ள பணி இந்த நிலைமையிலிருந்துதான் எழுகிறது. சோஷலிசக் கருத்துக்களையும் அரசியல் உணர்வையும் பாட் டாளி வர்க்க வெகுஜனங்களுக்கு ஊட்டுவதும், தன்னியல்பாய் நடந்தேறும் தொழிலாளி வர்க்க இயக்கத்திலிருந்து பிரிக்க முடியாதவாறு அத னுடன் இணைந்தமைந்த புரட்சிகரக் கட்சியை நிறுவுவதும்தான் இந்தப் பணி. இத்திசையில் ருஷ்ய சமூக-ஜனநாயகம் எவ்வளவோ செய்திருக் கிறது. ஆயினும் இன்னும் செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. இயக்கத்தின் வளர்ச் சியைத் தொடர்ந்து சமூக-ஜனநாயகவாதிகளது செயல்துறை விரிவடைந்து செல்கிறது. பணி பலதரப்பட்டதாகிவருகிறது. பிரச்சாரம், கிளர்ச்சி இவற்றின் அன்றாடத் தேவைகள் முன்னிலைக்குக் கொண்டுவரும் பல்வேறு தனிப்பட்ட பணிகளையும் செய்து முடிப்பதில் இயக்கத்தின் செயல்வீரர்களில் மேலும் மேலும் அதிகமானோர் தமது முயற்சிகளை ஒன்று திரட்டி ஈடுபடுத்த வேண்டியதாகிறது. இந் நிகழ்ச்சி இயற்கையானதுதான், தவிர்க்க முடி யாததுதான். ஆனால் இது இந்த தனிப்பட்ட பணிகளும் போராட்ட முறைகளும் சுயேச்சை யான தனி நோக்கங்களாகிவிடாமல்  தடுப்பதி லும் தயாரிப்பு வேலைகளே பிரதானமான தனிப் பெரும் செயற்பாடாய்க் கருதப்படுவதைத் தடுப் பதிலும் நம்மைக் குறிப்பான சிரத்தை கொள்ளச் செய்கிறது.

தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் வளர்ச் சிக்கும் அரசியல் நிறுவன ஒழுங்கமைப்புக்கும் உதவுவதும்தான் முதன்மையானதும் அடிப் படையானதுமான நமது பணி. இந்தப் பணியை பின்னணிக்குத் தள்ளுகிறவர்கள், எல்லாத் தனிப் பட்ட பணிகளையும் குறிப்பிட்ட போராட்ட முறைகளையும் இதற்குக் கீழ்ப்படுத்த மறுப்பவர் கள் தவறான பாதையில் செல்கிறவர்களாவர், இயக்கத்துக்குப் பெருந் தீங்கு இழைப்பவர்க ளாவர். ஆம், இந்தப் பணி பின்னணிக்குத்தான் தள்ளப்படுகிறது. முதலாவதாக, தொழிலாளி வர்க்க இயக்கத்திலிருந்து துண்டிக்கப்பட்டுத் தனிமைப்பட்டுள்ள சதி வேலைக் குழுக்களாகிய சக்திகளை மட்டுமே அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுத்த வேண்டுமென்று புரட்சியாளர்களுக்கு அறிவுறுத்துவோரால் இது பின்னணிக்குத் தள்ளப்படுகிறது.

இரண்டாவதாக, அரசியல் பிரச்சாரம், கிளர்ச்சி, நிறுவன ஒழுங்கமைப்பு இவற்றின் உள்ளடக்கத்தையும் வீச்சையும் குறுகச்  செய்து விடுவோராலும், தொழிலாளர்களுடைய வாழ்க் கையில் விதிவிலக்கான சில தருணங்ளில் மட்டும், விழாக் கொண்டாட்டங்களின் போது மட்டும் அவர்களுக்கு “அரசியலைத்” தெரியப்படுத்து வதுதான் சரியானது, பொருத்தமானது என நினைப்போராலும், எதேச்சாதிகாரத்துக்கு எதிரான அரசியல் போராட்டத்துக்குப் பதிலாய் எதேச்சாதிகாரத்திடமிருந்து தனிப்பட்ட சலு கைகள் சிலவற்றைப் பெறுவதற்கான கோரிக்கை களைப் பரிவுடன் மேற்கொள்வோராலும், இந்தத் தனிப்பட்ட சலுகைகளுக்கான கோரிக்கை கள் எதேச்சாதிகாரத்துக்கு எதிரான புரட்சிகரத் தொழிலாளி வர்க்கக் கட்சிக்கான முறையான விட்டுக்கொடுக்காத போராட்டத்தின் நிலைக்கு உயரும்படி உறுதி செய்வதற்குப் போதிய தொலைவு போகாதிருப்போராலும் இப்பணி பின்னுக்குத் தள்ளப்படுகிறது.

“ஒழுங்கமையுங்கள்!” என்று ரபோச்சயா மீசில் ஓயாமல் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருக்கிறது. “பொருளாதாரவாதப்” போக்கின் ஆதரவாளர்கள் எல்லோரும் இந்தக் கூச்சலை எதிரொலித்துக் கொண்டிருக்கிறார் கள். இந்த அறைகூவலுக்கு நாமும் முழு ஆதரவு அளிக்கிறோம் என்பதில் ஐயமில்லை. ஆனால் ஒழுங்கமையுங்கள், பரஸ்பர நலச் சங்கங்களிலும் வேலை நிறுத்த நிதிகளிலும் தொழிலாளர் குழுக்களிலும் மட்டுமின்றி ஓர் அரசியல் கட்சியாகவும் ஒழுங்கமையுங்கள், எதேச்சாதிகார அரசாங்கத்தையும் முதலாளித்துவ சமுதாயம் அனைத்தையும் எதிர்த்து வைராக்கியமான போராட்டம் நடத்துவதற்காக ஒழுங்கமையுங்கள் என்பதையும், இந்த அறைகூவலுடன் சேர்த்துக் கொள்ள நாங்கள் தவறமாட்டோம். இத்தகைய ஒழுங்கமைப்பு இல்லையேல் பாட்டாளி வர்க் கத்தால் ஒருபோதும் வர்க்க உணர்வு படைத்த போராட்டம் நடத்தும் நிலைக்கு உயர முடியாது. இத்தகைய ஒழுங்கமைப்பு இல்லையேல் தொழி லாளி வர்க்க இயக்கம் செயலும் சக்தியுமற்ற தாகவே இருக்க வேண்டியதாகிவிடும். தொழி லாளி வர்க்கம் தன்னையும் ருஷ்ய மக்கள் அனை வரையும் அரசியல், பொருளாதார அடிமை வாழ்விலிருந்து விடுதலை பெறச் செய்தாக வேண் டும். நிதிகளையும் போதக் குழுக்களையும் பரஸ் பர நலச் சங்கங்களையும் தவிர வேறு எவற்றின் துணையும் இல்லையேல் தொழிலாளி வர்க்கத் தால் அதற்குரிய இந்த மாபெரும் வரலாற்றுப் பணியை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது. வரலாற்றில் எந்த வர்க்கமும் ஓர் இயக்கத்துக்கு ஏற்பாடு செய்து அதற்குத் தலைமை தாங்கிச் செல்லவல்ல தனது அரசியல் தலைவர்களை, தனது முக்கியப் பிரதிநிதிகளை உருவாக்காமல் ஆட்சியதிகாரம் பெற்றதில்லை. ருஷ்யத் தொழி லாளி வர்க்கம் இத்தகைய ஆடவரையும் பெண்டி ரையும் தன்னால் உருவாக்கிக் கொள்ள முடியும் என்று ஏற்கெனவே காட்டியிருக்கிறது. கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் இவ்வளவு பரவலாய் வளர்ந்துள்ள போராட்டம் தொழிலாளி வர்க் கத்திடம் உள்ளாற்றலாய் அமைந்துள்ள மாபெரும் புரட்சி சக்தியை வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறது. சோஷலிசத்துக்காகவும் அர சியல் உணர்வுக்காகவும் அரசியல் போராட்டத் துக்காகவும் பாடுபடும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை ஈவிரக்கமற்ற மிகக் கொடிய அரசாங்க அடக்குமுறை குறையச் செய்துவிட வில்லை. அதிகரிக்கவே செய்கிறது என்பதை அது தெளிவுபடுத்தியுள்ளது.

நமது தோழர்கள் 1898ல் நடத்திய காங்கிரஸ் நமது பணிகளைச் சரிவர வரையறுத்துக் கொடுத்தது. அது அயலார் சொற்களைத் திருப் பிச்  சொல்வதுடனே, “அறிவுத் துறையினரது” ஆர்வத்தை வெளியிடுவதுடனே நின்றுவிட வில்லை… கட்சியின் வேலைத் திட்டத்தையும் நிறுவன ஒழுங்கமைப்பையும் போர்த் தந்திரத் தையும் செயலுக்குக் கொண்டுவந்து இந்தப் பணிகளை நிறைவேற்ற நாம் வைராக்கியமாய்ப் பாடுபட வேண்டும். நமது வேலைத் திட் டத்தின் அடிப்படைக் கூறுகள் குறித்து நமது அபிப் பிராயங்களை ஏற்கனவே எடுத்துரைத்துள் ளோம். விவரமாய் அவற்றை விரித்துரைப்பதற்கு இதுவல்ல உரிய இடம். நம்மை எதிர் நோக்கும் பிரச்சனைகளில் மிகவும் அவசரமானவற்றில் ஒன்றான நிறுவன ஒழுங்கமைப்புப் பிரச்சனை குறித்து வருகிற இதழ்களில் கட்டுரைத் தொடர் ஒன்றை எழுதத் திட்டமிடுகிறோம். இத்துறையில் ருஷ்யப் புரட்சி இயக்கத்தின் பழைய பிரதிநிதி களைக் காட்டிலும் நாம் வெகுவாய்ப் பிற்பட்ட நிலையில் உள்ளோம். இந்தக் குறை பாட்டை நாம் ஒளிவுமறைவின்றி ஒத்துக்கொண்டாக வேண்டும். நமது பணி மேலும் அதிக அளவுக்கு இரகசிய மாய் நடைபெறுவதற்கான முறைகளை வகுத்துக் கொள்ளவும், சரியான வேலை முறைகளையும் அரசியல் போலீசாரை ஏமாற்றுவதற்கும் போலீஸ் கண்களில் அகப்படாது தப்புவதற் குமான தக்கமுறைகளையும் நன்கு தெரியப் படுத்தவும் நாம் முழு முயற்சி எடுத்துக்கொண் டாக வேண்டும்.

ஓய்வு நேரமான மாலைகளை மட்டுமின்றி தம் வாழ்நாள் அனைத்தையும் புரட்சிக்காகப்  பணித்துக்கொள்ளக் கூடியவர்களை நாம் பயிற்றுவித்துக் கொண்டாக வேண்டும். நமது பணியின் பல்வேறு வடிவங்களிலும் கண்டிப் பான உழைப்புப் பிரிவினையை அனுசரிக்க இடம் தரும்படியான பெரிய நிறுவனத்தை நாம் கட்டியமைத்தாக வேண்டும். முடிவில் போர்த் தந்திரப் பிரச்சனைகள் சம்பந்தமாய் பின்வரு வதைக் குறிப்பிடுவதுடன் நிறுத்திக் கொள்கி றோம். சமூக-ஜனநாயகம் தனது கைகளுக்கு விலங்கிட்டுக் கொள்ளவில்லை, அரசியல் போராட்டத்துக்காக முன்கூட்டியே உய்த் துணர்ந்து முடிவு செய்யப்பட்ட ஒரே திட்டம் அல்லது முறைக்குள் அது தனது செயல்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளவில்லை, கட்சியிட முள்ள சக்திகளுக்குப் பொருத்தமாயும் அந்தந்த நிலைமைகளிலும் சாத்தியமான சிறந்த பலன் களை அடைய உதவுவனவாயும் இருக்கும் பட்சத்தில் எல்லாப் போராட்ட முறைகளையும் அது அங்கீகரிக்கிறது.

பலம்மிக்கதாய் ஒழுங்கமைந்த ஒரு கட்சி நம்மிடம் இருக்குமாயின், தனியொரு வேலை நிறுத்தமே அரசியல் ஆர்ப்பாட்டமாய், அரசாங் கத்தின் மீதான ஓர் அரசியல் வெற்றியாய் மாறி விடலாம். பலம்மிக்கதாய் ஒழுங்கமைந்த ஒரு கட்சி நம்மிடம் இருக்குமாயின் தனியோர் இடத்தில் ஏற்படும் எழுச்சி வெற்றிகரப் புரட்சி யாய் வளர்ந்துவிட முடியும். தனிப்பட்ட கோரிக் கைகளுக்காக அரசாங்கத்துடன் நடைபெறும் போராட்டங்களும் நாம் வென்று கொள்ளும் குறிப்பிட்ட சில சலுகைகளும் பகைவனுடனான சிறிய கைகலப்புகளே, இடைவழிகளில் பகைவ னுடன் ஏற்படும் சந்திப்புகளே என்பதையும், முடிவான போர் இனிமேல்தான் நடைபெறப் போகிறது என்பதையும் நாம் மனதிற்கொண்டாக வேண்டும். பகைவனது கோட்டை அதன் முழு பலத்துடன் நம் எதிரே வானுற உயர்ந்து நிற்கிறது. நம்மீது குண்டும் வெடியும் பொழிந்து நமது தலைசிறந்த வீரர்களை வீழ்த்திக்கொண்டிருக் கிறது. இந்தக் கோட்டையை நாம் பிடித்தாக வேண்டும். விழித்தெழும் பாட்டாளி வர்க்கத்தின் எல்லா சக்திகளையும் ருஷ்யப் புரட்சியாளர் களது எல்லா சக்திகளுடனும் ஒன்றுபடச் செய்து ருஷ்யாவில் ஜீவ ஆற்றலும் நேர்மையும் கொண்ட யாவற்றையும் கவர்ந்திழுக்கக்கூடிய ஒரு கட்சி யாய் இணைத்திடுவோமாயின் நிச்சயம் நாம் இந்தக் கோட்டையைப் பிடித்துவிடலாம். “கோடிக்கணக்கான தொழிலாளர்களின் கரம் உயர்த்தப்படும், படையாட்களது துப்பாக்கி முனைகளால் பாதுகாக்கப்படும் எதேச்சாதிகார ஒடுக்குமுறை தகர்த்துத் தவிடுபொடியாக் கப்படும்” என்று ருஷ்யத் தொழிலாளி-புரட்சி யாளர் பியோத்தர் அலெக்சே யெவ் வருவது அறிந்து கூறிய அந்த உன்னத வாக்கு அப் பொழுது நிறை வேற்றப்படும்.

 

1899 அக்டோபரிலும் நவம்பர் ஆரம்பத்திலும் எழுதப்பெற்றது.

1900 டிசம்பரில் இஸ்க்ரா இதழ் 1ல் வெளியானது.

நூல் திரட்டு, தொகுதி – 4, பக்கங்கள் 371 – 77

 

கருத்துக்கள் இல்லை

Please start yout discussion here ...