மார்ச் மாத மார்க்சிஸ்ட் இதழில் …

817
0
SHARE

இந்தியாவின் கிராமப்புறங்களில் தீவிரமாகிக் கொண்டிருக்கும் முரண்பாடுகள் குறித்தும், அகில இந்திய அளவில் அவற்றை எதிர்கொள்ள அகில இந்திய விவசாயிகள் சங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் அதன் தேசிய இணைச் செயலாளர் முனைவர் விஜூ கிருஷ்ணன் எழுதிய கட்டுரை இந்த இதழில் வெளியாகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தத்துவ ஆசான்களில் ஒருவரான தோழர் இ.எம்.எஸ். அதிகாரபூர்வமாக ஒரு கம்யூனிஸ்ட் ஆக மாறுவதற்கு முன்பாக சோஷலிசம் குறித்து உலக முழுவதிலும் நிலவி வந்த பல்வேறு கருத்தோட்டங்களை விளக்கி, விஞ்ஞான சோஷலிசமே எதிர்காலத்திற்குரியது என்பதை மிகத் தெளிவாக 1936-ல் எழுதிய கட்டுரை ‘மாத்ருபூமி; வார இதழில் வெளியானது. 2017 ஜூன் 11 இதழில் இக்கட்டுரை மறுபதிப்பு செய்யப்பட்டது. இதன் தமிழாக்கத்தை மலையாளத்திலிருந்து தோழர். நெய்வேலி மு. சுப்ரமணி செய்துள்ளார்.

தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்றபோதிலும் தனியார் மூலதனத்திற்கு மட்டுமே சேவை செய்வதை நோக்கமாகக் கொண்ட பாஜக அரசின் ஐந்தாவது பட்ஜெட் தனியார் மயத்தை முழுமையாகப் பின்பற்றுவதாக அமைந்துள்ளது என்பதை பட்ஜெட்டின் பல்வேறு தரவுகளின் அடிப்படையில் விளக்கியுள்ளார் பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா.

கட்சித் திட்டம் பற்றிய வரிசையில் மக்கள் ஜனநாயகத்திற்கான புரட்சியில் பெண்களின் பங்கு பற்றியும், அனைத்து உழைக்கும் பிரிவினரிலும் சரிபாதியாக உள்ள பெண்கள் சாதி, வர்க்கம், பாலினம் என்ற மூன்று வகையிலுமே ஒடுக்குமுறைக்கு ஆளாகின்றனர் என்பதையும் தோழர். உ. வாசுகி கட்சித் திட்டத்தில் பெண்கள் பற்றி எழுதிய கட்டுரை விளக்குகிறது.

2018 பிப்ரவரி 17-20 தேதிகளில் தூத்துகுடி நகரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் 22வது மாநில மாநாடு தமிழக அரசியல் நிலைமை குறித்து மேற்கொண்ட விவாதங்கள், எதிர்காலத் திட்டங்கள், அறைகூவல்கள் பற்றி தோழர் உ.வாசுகி எழுதிய கட்டுரை விளக்குகிறது.

இந்திய விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் நகர்ப்புற மக்கள் ஆகியோரின் மீது நவ தாராளமய நடவடிக்கைகள் உருவாக்கியுள்ள தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்ய மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அமைத்த குழுக்களின் ஆய்வறிக்கைகள் தற்போது தமிழில் தனியொரு நூலாக வெளிவந்துள்ளது. இந்த ஆய்வின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டுவதாக நூல் அறிமுகம் அமைகிறது.

நமது வாசகர் வட்டங்களில் ஆழமான விவாதத்திற்குரிய இக்கட்டுரைகளை படித்து, விவாதித்து, அவற்றை மேலும் பரவலாகக் கொண்டு செல்ல வேண்டுகிறோம்.

ஆசிரியர் குழு

கருத்துக்கள் இல்லை

Please start yout discussion here ...