மே 2019 மார்க்சிஸ்ட் இதழில் …

386
0
SHARE

வரலாற்று சிறப்பு மிக்க தொழிலாளர் தினத்தை உலகமே உற்சாகமாக கொண்டாடியது. இந்த கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் உள்ள தொழி லாளர்களின் போராட்டக்கனலின் வெளிப்பாடாகவே எழுந்து நிற்கிறது. ஏகாதிபத் தியங்களின் லாப வெறி உழைக்கும் மக்களை மேலும், மேலும் சுரண்டிக் கொழுக் கிறது. எப்போதும்போல் தொழிலாளி வர்க்கமும் அதற்கேற்ற வகையில் எதிர்த்து நிற்கிறது. பல நாடுகளில் வலதுசாரிகள் ஆட்சி அதிகாரத்தை பிடித்த அதே நிலை இந்தியாவிலும் ஏற்பட்டது. இந்திய தொழிலாளி வர்க்கமும் தனது நேச அணியான விவசாயிகளை தன்னோடு இணைத்துக்கொண்டு  தற்போது வலுவாக களம் காண்கிறது. இந்த வளர்ச்சிப்போக்குகளை மிக ஆழமாகவும், எளிமையாகவும் தோழர் சிந்துவின்  “ஏகாதிபத்திய தாக்குதலும், உழைக்கும் வர்க்க எதிர்ப்பும்” என்ற கட்டுரை விளக்கு கிறது. தோழர் ஜி.பாலச்சந்திரன் அதை மிக சிறப்பாக தமிழில் வழங்கியுள்ளார்.

கடந்த இதழில் வெனிசுவேலாவை மையப்படுத்தி உலக நிகழ்வுகளிலும் மற்ற நாடுகளிலும் ஏகாதிபத்தியத்தின் தலையீட்டை விளக்கி பேரா. பிரபாத் பட்நாயக் எழுதிய கட்டுரையை வாசகர்கள் படித்திருப்பீர்கள். அதன் தொடர்ச்சியாக வெனிசுவேலாவில்  ஏகாதிபத்தியத்தின் தலையீட்டை “மீண்டும் வருமா வெனிசு வேலா?” என்கிற கட்டுரையில் மிக விரிவாக எழுதியுள்ளார் இ.பா.சிந்தன்.

பிப்ரவரி மற்றும் மார்ச் மாத இதழ்களில் முற்பட்ட சாதிகளில் உள்ள பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு பத்து சதவீத இடஒதுக்கீடு குறித்தும், பொதுவாக இடஒதுக்கீடு குறித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிலைபாடு குறித்தும் தோழர் கே. பாலகிருஷ்ணன் எழுதி வந்த “இட ஒதுக்கீடு சிபிஐ (எம்) அணுகுமுறை” என்கிற கட்டுரையின் இறுதிப் பகுதி இந்த இதழில் வெளியாகிறது.

மோடி ஆட்சியில் எல்லா துறைகளும் மிக மோசமான பாதிப்பை அடைந்துள்ளன. குறிப்பாக பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி உள்ளிட்ட நடவடிக்கைகளால் வேலைவாய்ப் பென்பது இக்காலத்தில் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளது. கடந்த 45 ஆண்டுகள் இல்லாத வகையில் வேலைவாய்ப்பின்மை உயர்ந்துள்ளது. சரியான இடைவெளியில் வேலை பற்றிய கணக்கெடுப்புகளும் நடைபெற்று வந்தன. அந்த கணக்கெடுப்புகள் மோடியின் ஆட்சி காலத்தில் வேலைவாய்ப்பில் ஏற்பட்டுள்ள மோசமான பாதிப்புகளை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. கணக்கெடுப்பு முறைகளையும் அது வெளிக்கொணரும் அம்சங்களையும் விளக்கி தோழர் வெங்கடேஷ் ஆத்ரேயா அவர்களின் “இந்தியாவில் வேலையின்மை நெருக்கடி” என்ற கட்டுரை விளக்குகிறது.

தொடர்ந்து வெளியாகும் மார்க்சிய சொல்லகராதியின் நான்காம் பகுதியில் இயக்கவியலின் இரண்டாம் விதி விளக்கப்பட்டுள்ளது.

எப்போதும் போல் வாசகர்களும், வாசகர் வட்ட பொறுப்பாளர்களும் இதழ் பற்றிய கருத்துக்களை ஆசிரியர் குழுவிற்கு அனுப்ப வேண்டுகிறோம். மார்க்சிஸ்ட் இதழின் சந்தாவை அதிகரித்திட கூடுதல் கவனம் செலுத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

 – ஆசிரியர் குழு

கருத்துக்கள் இல்லை

கருத்தைப் பதிவு செய்யவும்